பாஜக ஆளும் மாநிலங்களில் காதலர்கள் மீது தாக்குதல்..!

இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்கள் பாஜக ஆட்சி செய்தி வருகிறது. மத்தியிலும் பாஜக ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக ஆதரவு அமைப்புகளான இந்து அமைப்புகள் காதலர் தினம் கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் காதலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாஜக அளும் மாநிலமான குஜராத்தில் காதலர்கள் ஒன்றாக இருக்கும் இடங்களுக்குச் சென்ற இந்து அமைப்பினர் தாலிகளை வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதோடு அவர்களை தாக்கியும் விரட்டியுள்ளனர். காந்தியடிகளின் ஆஸ்ரமம் அமைந்துள்ள சபர்மதி ஆஸ்ரமம் அமைந்துள்ள ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த காதலர்கள் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் ‘ஜெர் ஸ்ரீராம்’ என்ற கோஷங்களை எழுப்பியபடி காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதல் சம்பவங்களை முதலில் வேடிக்கை பார்த்த காவல்துறையினர் பின்னர் தாக்கியவர்களை கைது செய்தனர். ஆனாலும் பாஜக ஆளும் மாநிலங்களில் பரவலாக தாக்குதல் நடந்து வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*