ரஜினி கட்சிக்கு நிர்வாகிகள் தேர்வு

புதிய கட்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தீவிரமாக பொது மக்களை ரஜினி மக்கள் மன்றத்தில் சேர்க்க ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் வகையில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளை நியமிக்க திட்டமிடப்பட்டது. இதன்படி முதல் கட்டமாக வேலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இப்போது இந்த 3 மாவட்டங்களுக்கும் மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ரஜினி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்துக்கு நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணி இன்று நடந்தது. இதில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஸ்டாலின் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*