ஸ்டாலினை நிழலாக காப்பேன் :வைகோ

நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொலை:ராகுல் அதிர்ச்சி..!

காதலர் தினத்தன்று கல்லூரிக்கு வந்தால் நடவடிக்கை..!
ரவுடி பினு போலீசில் சரண்..!

பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சி சார்பில் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தலைவர் வைகோ கலந்து கொண்ட கூட்டம் மதுரை ஓபுளாபடித்துறையில் நடந்தது அப்போது பேசிய வைகோ:-
“கடந்த 30 ஆண்டுகளாக நான் திமுகவுக்காக உழைத்தேன். 14 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக கொடி பறக்கும் மேடையில் பேசுகிறேன். இந்த மேடையில் பேசும் போது எனக்கு பல நினைவுகள் வந்து போகின்றன. தாய் கழகமான திமுகவை காப்பதே என் லட்சியம். எத்தனை கட்சிகள் வந்தாலும் எத்தனை பேர் புதிதாக முளைத்து வந்தாலும் திமுகவை யாராலும் அழிக்க முடியாது.அரசியலில் எனக்கு அடையாளம் கொடுத்தவர் கருணாநிதி. தமிழ் மண்ணில் திராவிட இயக்கத்தைக் காக்க திமுகவை ஆதரிப்பது என் கடமை என நினைக்கிறேன்.திராவிட இயக்கத்தை உயிருக்கு மேலாக நான் நேசிக்கிறேன். நான் திமுகவில் இருந்த போதும் திமுக கூட்டணியில் இருந்த போதும் பல முறை வெற்றி பெற்றதை மறைத்து விட்டு பலரும் பேசுகிறார்கள். தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த போது மு.க.ஸ்டாலின் வைகோ திமுக கூட்டணிக்கு வந்து விட்டதாக கருணாநிதியிடம் தெரிவித்தார். நான் கருணாநிதியிடம் உங்களோடு இருந்த பொது எப்படி உங்கள் நிழலாக கேடயமாக இருந்தேனோ அது போல ஸ்டாலினுக்கு இருப்பேன் என்று அவரிடம் கூறினேன். ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதுதான் என் ஆசை. எனக்கு பதவி ஆசை கிடையாது.மோடியின் அடிமைகளாக மாநிலத்தை ஆளும் இந்த ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் நாம் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*