ஜெயலலிதா மரணம்: விசாரணையில் சசிகலா உறவினர் ஆஜர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணை ஆணையம் அனுப்பும் சம்மன் அடிப்படையில் இதுவரை 30-க்கும் அதிகமானவர்கள் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா உதவியாளர் கார்த்திகேயன் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர் நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கங்களுடன் பதிலளித்தார். ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்றுடன் சேர்த்து அரசு டாக்டர் பாலாஜி இதுவரை 3-ஆவது முறையாக ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*