‘ஜெ’ படம் : ஸ்டாலின் கேள்விக்கு பொய் சொன்ன அமைச்சர் ஜெயக்குமார்..!

’ஜெ’ கை ரேகையை உருட்டியது அம்பலமானது..!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு 17 பேர் பலி..!

பாஜக ஆளும் மாநிலங்களில் காதலர்கள் மீது தாக்குதல்..!

”எனக்கு எதேனும் நேர்ந்தால்” – பொன்னாருக்கு உதயகுமார் திறந்த மடல்..!

‘மோடி கேர்’ திட்டத்தை நிராகரித்தார் மம்தா பானர்ஜி!
தமிழக அமைச்சரவையிலேயே திராவிட இயக்க உணர்வும், நிர்வாகத் திறனும் உள்ள அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு பல தரப்பினருக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். ஆனால் அவரை நிர்வாகத்திறன் குறைந்த எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போது அவருக்குக் கீழே அமைச்சராக பணியாற்றும் ஜெயக்குமார் “சட்டமன்றத்தில் ஜெயலலிதா படத்தை திறக்க மோடிக்கோ, கவர்னருக்கோ அழைப்பு விடுக்கவில்லை” என்ற தவறான தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த 12-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது. ஊழல் குற்றவாளியின் படத்தை திறந்து வைக்கலாமா? என்ற கேள்வியும், ஜெ படத்திறப்பு விழாவுக்கு ஏன் மோடி வரவில்லை என்ற கேள்வியும் எழுந்து இதே கேள்விகளை திமுக செயற் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினும் கேட்டிருந்தார், இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்:-
“ ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு ஏன் பிரதமரும், குடியரசுத்தலைவரும் வரவில்லை என்று ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். யாரை எப்போது எப்படி எதற்காக அழைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். ஸ்டாலின் கூறுவது போல நாங்கள் பிரதமரையோ, கவர்னரையோ படத்திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை” என்று கூறினார் அமைச்சர் ஜெயக்குமார்.
மோடியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
கடந்த 2017-ஆம் ஆண்டு மே, 24-ஆம் தேதி டெல்லியில் வைத்து பிரதமர் மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அச்சந்திப்பின் பின்னர் பேசிய முதல்வர் :-
”தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட இருக்கிறது. அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். அது போல எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.சென்னையில் டிசம்பர் மாதம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக கொண்டாட இருக்கிறோம். அந்த விழாவிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன்” என்றார்.
இது கடந்த ஆண்டு ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு மோடிக்கு விடுத்த அழைப்பை அவர் வாயாலே சொன்ன வார்த்தைகள். இது அனைத்து ஊடகங்களிலும் பதிவாகியிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு மோடிக்கு அழைப்பே விடுக்கவில்லை என்று தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது முதல்வர் டெல்லி சென்றது பற்றிய தகவலே தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாரா அமைச்சர் ஜெயக்குமார்.

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொலை:ராகுல் அதிர்ச்சி..!
ஸ்டாலினை நிழலாக காப்பேன் :வைகோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*