திமுகவை பின்னுக்குத்தள்ளி பாஜகவை முன்னரங்கிற்கு கொண்டு வரும் தொலைக்காட்சி விவாதங்கள்..!

‘ஜெ’ படம் : ஸ்டாலின் கேள்விக்கு பொய் சொன்ன அமைச்சர் ஜெயக்குமார்..!

’ஜெ’ கை ரேகையை உருட்டியது அம்பலமானது..!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு 17 பேர் பலி..!

பாஜக ஆளும் மாநிலங்களில் காதலர்கள் மீது தாக்குதல்..!

”எனக்கு எதேனும் நேர்ந்தால்” – பொன்னாருக்கு உதயகுமார் திறந்த மடல்..!

‘மோடி கேர்’ திட்டத்தை நிராகரித்தார் மம்தா பானர்ஜி!

இந்தியாவில் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது மத மோதல்கள் தமிழகத்தில் குறைவு. பலரது உயிரை பலி கொண்ட கோவை கலவரம், அதையொட்டி நடந்த குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களின் பின்னர் பெருந்திரளான மக்களை மத வெறி சக்திகள் திரட்டும் அளவுக்கு தமிழகதில் மத வெறி சக்திகள் வலுப்பெறவில்லை. இன்னும் அதே நிலைதான் என்றாலும், ஊடகங்கள் மூலம் தொடர்ந்து பாஜகவினர் ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்கள். நாத்திக மண்ணான தமிழகத்தில் இந்துக்கள் இழிவு படுத்தப்படுகிறார்கள் என்று. கூடவே இந்துக்களுக்கு சலுகைகள் வேண்டும், அரசு கையில் உள்ள கோவில்களை இந்து மதத்தில் உள்ள பொதுவானவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்றும் பல விதமான கருத்துக்களை தொலைக்காட்சிகள் வழியே திணித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி, தினகரன், என அதிமுக பல அணிகளாக சிதறியுள்ளது. இதில் தனித்துப் போட்டியிட்டு தினகரன் தன் செல்வாக்கை ஆர்.கே. நகரில் நிரூபித்திருக்கிறார். அது போல 89 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு திமுக செயல் தலைவரான ஸ்டாலின் எதிர்க்கட்சித்தலைவராக இருக்கிறார். ஆனால் இவர்களின் கருத்துக்களுக்கோ இவர்கள் முன் வைக்கும் அரசியல் கருத்துக்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்காத தொலைக்காட்சி ஊடகங்கள் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று தமிழகத்தில் எந்த விதமான செல்வாக்கும் இல்லாத பாஜகவின் மாநில தலைவர்கள் சொல்வதை எடுத்து வைத்துக் கொண்டு அன்றாடம் தொலைக்காட்சி விவாதங்களை நடத்துகின்றன.
தமிழகத்தின் சில குறிப்பிட்ட தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளே கமலாலயத்தில் தயாராவது போலவே இருக்கிறது. பாஜகவின் இரு முக்கிய பிரமுகர்கள் ஒருவர் தமிழிசை, இன்னொருவர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த இருவரும் என்ன கருத்தைச் சொன்னாலும் உடனே அதை வைத்து தனி விவாதங்கள், தனி செய்தி தொகுப்புகளை நியூஸ் 7 முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறது. உதாரணத்திற்கு விரல் விட்டு எண்ணக் கூடிய சில இந்து வெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உடனே நியூஸ் 7 தலைப்பு வைக்கிறது //‘காதலர் தினத்தை தமிழகம் எதிர்ப்பது ஏன்?’ // எவளவு அபத்தமான முட்டாள் தனமான தலைப்பு இது. இந்த தலைப்பே பாஜகவின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் இருந்து வைக்கப்பட்டதோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு. ஏதோ எழரை கோடி தமிழக மக்களும் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல ஒரு பொய் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
அடுத்து நேற்று தமிழிசை “இது பெரியார் பூமியல்ல பெரியாள்வார் பூமி” என்றார். உடனே பாஜக தயவில் செயல்படும் சில தொலைக்காட்சிகள் “பெரியாழ்வாரா பெரியாரா ?” என்ற விவாதத்திற்கு கிளம்பி விட்டார்கள்.
இதோ இன்று ஏதாவது சொல்வார்கள் நாளையே அதை வைத்தே  தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்தும் இந்த விவாதங்களால் யாருக்கேனும் ஏதேனும் பயனுண்டா. எப்படியாவது பொய்யை விவாதங்களாக்கி எங்காவது ஒரு கலவரத்தை மூட்டி சில தொகுதிகளையாவது வெல்ல முடியுமா என பாஜக கணக்குப் போடுகிறது அதற்கு சில தொலைக்காட்சிகளும் உடந்தையாக தங்கள் ஊடகப்பணியை தொடர்கிறார்கள்.
மக்களிடம் செல்வாக்கோடு இருக்கும் திமுகவுக்கு இந்த விவாதங்களால் எந்த பயனும் கிடையாது. காரணம் இந்த விவாதங்களை 98% மக்கள் பார்ப்பதும் இல்லை. இவைகளுக்கு முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. குறிப்பாக இது தமிழக வாக்கு வங்கியை தீர்மானிப்பதில்லை. ஆனால் கருத்துருவாக்கம் செய்கிறார்கள். ஊடகத் தொழில் என்பது சுதந்திர சிந்தனை கொண்டது என்ற நிலை மாறி ஊடக முதலாளிகளின் கருத்துக்களை சுமந்தலையும் தொழிலாக மாறி விட்டது.
அதை தமிழகத்தில் கண்கூடாக நாம் பார்க்கிறோம். பாஜகவுக்காக வரிந்து கட்டி தொழிற்படும் சில தொலைக்காட்சிகள் பாஜக அஜெண்டாவுக்குள் தொழில்படுகின்றன.
ஜெயலலிதா மரணத்தின் பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மைனாரிட்டி அரசு கலைந்து தேர்தல் நடந்திருந்தால் திமுக மிருக பலத்துடன் ஆட்சிக்கு வந்து விடும் என்பதை தெரிந்த பாஜக இந்த மைனாரிட்டி ஆட்சியை பாதுகாத்து தங்களின் பொம்மை ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வரும் நிலையில், சில தொலைக்காட்சி ஊடகங்களும் திமுக ஆட்சிக்கு வருவதை குழப்ப எத்தனிப்போடு செயல்படுகின்றன. அதனால்தான் முக்கியத்துவமற்ற கருத்துக்களை முன்னரங்கிறகு கொண்டு வந்து தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.
மைதிலி

கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொலை:ராகுல் அதிர்ச்சி..!
ஸ்டாலினை நிழலாக காப்பேன் :வைகோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*