துணைவேந்தர் பதவி: புஷ்பவனம் குப்புசாமி சாதியால் வீழ்த்தப்பட்ட கதை..!

திமுகவை பின்னுக்குத்தள்ளி பாஜகவை முன்னரங்கிற்கு கொண்டு வரும் தொலைக்காட்சி விவாதங்கள்..!

‘ஜெ’ படம் : ஸ்டாலின் கேள்விக்கு பொய் சொன்ன அமைச்சர் ஜெயக்குமார்..!

’ஜெ’ கை ரேகையை உருட்டியது அம்பலமானது..!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு 17 பேர் பலி..!

புஷ்பவனம் குப்புசாமியின் பாடலை தரிசிக்காத தமிழர்களே இருக்க முடியாது. இசையை முறையாகக் கற்று தமிழ் உணர்வை மேடைகளில் ஊட்டியதோடு, கிராமப்புற பாடல்களை வெகு மக்கள் ரசிக்கும் படியாக தன் கணீர் குரலில் அருமையாக பாடி புகழ் பெற்றவர் புஷ்பவனம் குப்புசாமி. குறிப்பாக தன் சாதியால் முன்னுக்கு வராமல் தன் பாட்டுத் திறமையால் முன்னுக்கு வந்த மூத்த பாடகர்.
இசைக்காக இரு முறை முனைவர் பட்டம் பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி பட்டம் வென்றவர். ஆல் இந்தியா ரேடியோவின் ஏ – கிரேட் ஆர்டிஸ்ட் என சகல தகுதிகளோடும் இசை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராகும் தகுதியோடு இருந்த புஷ்பவனம் குப்புசாமி அந்த பதவிக்காக விண்ணப்பித்த நிலையில், புஷ்பவனம் குப்புசாமியை விட தகுதி குறைவான ஆனால் பிராமாணர் சாதியில் பிறந்த பிரமிளா குருமூர்த்தி என்பவருக்கு கடைசி நேரம் இசை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியை வழங்கியிருக்கிறது தமிழக அரசு.

இவரை துணைவேந்தராக கொண்டு வர அரசின் தலைமைச் செயலகத்தில் செல்வாக்கோடு இருக்கும் சிலரும், தொல்லியல்துறை அமைச்சராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் தரப்பு பிரமிளா குருமூர்த்தி தரப்பை தொடர்பு கொண்டு துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகே அவர் அவசர அவசரமாக விண்ணப்பித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் விண்ணப்பித்த உடனேயே அவரை துணைவேந்தர் ஆக்கி விட்டு அவருக்கு முன்பு விண்ணப்பித்த புஷ்பவனம் குப்புசாமிக்கு அந்த பதவியை வழங்காமல் விட்டிருக்கிறார்கள்.
பிராமணப் பெண்ணான பிரமிளா குருமூர்த்தியை விண்ணப்பிக்கவும் சொல்லி பதவியையும் அள்ளிக் கொடுத்திருக்கிறார் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். தனக்கு நடந்த புறக்கணிப்பு பற்றி பேசிய புஷ்பவனம் குப்புசாமி:-
”இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை கோரி தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அரசு அறிவித்த குறிப்பிட்ட காலத்திற்குள் நானும் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பக்காலம் முடியும் வரை 13 விண்ணப்பங்கள் துணைவேந்தர் பதவிக்கு பெறப்பட்டிருந்தது. அதன்படி நான்தான் தோ்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.ஆனால், சட்டத்திற்கு புறம்பாக தேவையின்றி விண்ணப்பிப்பதற்கான காலம் நீட்டிக்கப்பட்டது. அந்த தேதியை நீடித்தவர்கள் பின்னர் பிரமிளா குர்மூர்த்தியை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி அவர் விண்ணப்பிக்க அவருக்கே அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.தற்போதைய ஆட்சியில் பிறப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படுவதில்லை” என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருக்கிறார்.

 
பிரமிளா குர்மூர்த்தி பின்னணியும் பிராமண அரசியலும்

க்ளீவ்லேண்ட் சுந்தரத்துடன் ஒப்பந்தம்
க்ளீவ்லேண்ட் சுந்தரத்துடன் ஒப்பந்தம்

 

பிரமிளா குர்மூர்த்தி பின்னணியும் பிராமண அரசியலும்

பிரமிளா குருமூர்த்தி கர்நாடக இசைக்கலைஞர் துணைவேந்தராக வரும் அளவுக்கு தகுதி கிடையாது என்றாலும் அரசியல் பின்புலமும் பிராமண சாதியில் செல்வாக்கும் உள்ளவர். இவரை துணைவேந்தராக நியமித்ததன் பின்னணியில் பிராமண லாபி இருப்பதை நாம் கண்டுணர முடியும். அமெரிக்காவின் க்ளிவ்லேண்ட் மாகாணத்தில் இருக்கும் ‘க்ளீவ்லேண்ட் பைரவி பைன் ஆர்ட்ஸ்’ என்ற கர்நாடக சபாவை சுந்தரம் என்பவர் நடத்தி வருகிறார். இதனால் இவரது பெயரே க்ளீவ்லேண்ட் சுந்தரம். ஆண்டு தோறும் தியாராய கீர்த்தனைகள், பஜனைகள், சமஸ்கிருத ஸ்லோகங்கள், கர்நாடக இசை என அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடத்தும் இந்த சுந்தரத்தின் பைன் ஆர்ட் நிறுவனத்தோடு நீண்ட கால தொடர்புடையவர்தான் பிரமிளா குருமூர்த்தி. சுதா ரகுநாதன் போன்ற இசைக்கலைஞர்களுக்கு விருது கொடுத்தும் இந்த அமைப்பு கௌரவித்திருக்கிறது. இதே சுதாரகுநாதன் தான் பிரமிளா குர்மூர்த்தியை துணைவேந்தராக்க அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
பிரமிளா குர்மூர்த்தி இசைப்பல்கலைக்கழத்திற்கு துணை வேந்தர் ஆனதும் முதன் முதலாக அவர் செய்தது. க்ளீவ்லேண்ட பைரவி பைன் ஆர்ட் சபாவின் நிறுவனர் சுந்தரத்துடன் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடுகிறார். அது அமெரிக்க மாணவர்களுக்கு நமது பாரம்பரிய இசையைக் கற்றுக் கொடுத்து அதற்கு பட்டயச் சான்றிதழ் அளிப்பதற்கான ஒப்பந்தத்தை பிரமிளா குருமூர்த்தியும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் செய்கிறார்கள். பாரம்பரிய இசை என்று குறிப்பிடுகிறார்களே தவிற எது பாரம்பரிய இசை என்று குறிப்பிடவில்லை. இந்த ஒப்பந்தத்திற்காக பல கோடி ரூபாய் க்ளீவ்லேண்ட் சுந்தரத்திற்கு நமது வரிப்பணத்தில் இருந்து செல்லும். இதற்கு எல்லாம் எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை.
கர்நாடக இசை, பிரமாண நம்பிக்கைகளை இசை வடிவத்தில் பிரச்சாரம் செய்து வரும் க்ளிவ்லேண்ட் சுந்தரம் செய்வது பாரம்பரிய இசையா நமது வயலோரங்களில் பாடப்படும் இசை தன் கணீர் குரலால் பாடி நம் நாடி நரம்புகளை முறுக்கேறச் செய்யும் புஷபவன்ம் பாடுவது பாரம்பரிய இசையா?
இசைக்கு சாதி கிடையாது என்று சில பார்ப்பனர்கள் சொல்வார்கள். ஆனால் இசைக்கு சாதி உண்டு என்பது புஷபவனம் குப்புசாமியை நிராகரித்து விட்டு பிரமிளா குருமூர்த்தியை பதவிக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் உறுதியாகிறது. மேலும் துணைவேந்தர் பதவியை பெற கோடிக்கணக்கான ரூபாய்கள் லஞ்சமாக பெறப்படுகிறது என்ற குற்றச்சாட்டு அரசியல் அரங்கில் உள்ள நிலையில், மாஃபா பாண்டியராஜன் இந்த நியமனம் தொடர்பாக விரிவான பதிலை அளிப்பாரா? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்..!

பாஜக ஆளும் மாநிலங்களில் காதலர்கள் மீது தாக்குதல்..!

”எனக்கு எதேனும் நேர்ந்தால்” – பொன்னாருக்கு உதயகுமார் திறந்த மடல்..!

‘மோடி கேர்’ திட்டத்தை நிராகரித்தார் மம்தா பானர்ஜி!

#புஷபவனம்_குப்புசாமி #க்ளீவ்லேண்ட்_சுந்தரம் #கிளிவ்லேண்ட்_சுந்தரம் #Cleveland_Sundaram #பிரமிளா_குருமூர்த்தி #pramila_gurumurthi #mami_politics #minister_pandiarajan

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*