நிரவ் மோடி ஊழல் ஐமுகூ ஆட்சி காலத்தில் துவங்கியது: அலஹாபாத் வங்கியின் முன்னாள் அதிகாரி

நிரவ் மோடியின் ஊழல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில் ஆரம்பித்தது என அலஹாபாத் வங்கியின் முன்னாள் அதிகாரி தினேஷ் டூபேய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில் துவங்கிய நிரவ் மோடியின் ஊழல், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்தில் பெரிதாக காட்டப்படுகிறது” என கூறியிருக்கிறார்.

மேலும் அவர், நிரவ் மோடியின் உறவினரும் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனருமான மெஹுல் ஜோஸ்கிக்கு லோன் வழங்க நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த காரணத்தால் அவர் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். 2013-ஆம் ஆண்டு இதுகுறித்து அவர் அரசாங்கத்துக்கும் , ரிசர்வ் வங்கிக்கும் தகவல் அனுப்பியிருக்கிறார். ஆனால் மெஹுல் ஜோஸ்கிக்கு லோன் வழங்கச் சொல்லி மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். அதனால் மன உளைச்சலுக்கு ஆளான தினேஷ், தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*