டீக்கடை கூட அவர் கடை கிடையாது: ஓபிஎஸ் குறித்து டிடிவி

மோடி சொன்னதால் தான் எனது அணியை அதிமுக.வுடன் இணைத்தேன், அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன். சசிகலா குடும்பம் கொடுத்த சித்ரவரைக்கு வேறு யாராவது இருந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துக்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “திமுகவை குடும்ப அரசியல் செய்வதாக கூறும் ஓபிஎஸ் குடும்பத்தின் கையில்தான் தேனி மாவட்ட அதிமுக அரசியல் உள்ளது. பாஜகவின் முழு ஏஜெண்டாக ஓபிஎஸ் மாறிவிட்டார். சசிகலா குடும்பம் சித்ரவதை செய்ததாக அவதூறு கூறுகிறார். கோபத்தில் பாஜக பேச்சைக் கேட்டு நடப்பதை ஒத்துக் கொண்டார். அவர் வைத்திருந்த டீக்கடை கூட அவர் கடை கிடையாது, அவர் தம்பி நடத்தி வந்தது. என்னிடம் மாங்காய் பிஸ்னஸ் செய்வதாக கூறியிருந்தார். பன்னீர் செல்வம் பேசுவதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*