மோடிக்கு அழுத்தம் கொடுக்குமா-திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டம்?

மோடிக்கு ஜெயலலிதா மீது கோபம் இருந்தது..!

அடித்துக் கொன்று ஆற்றில் வீசிய ஆந்திர போலீஸ்:அதிர்ச்சி தகவல்..!

காவிரி மேலாண்மை வாரியம்:தமிழகம் தோற்கக் கூடாது-அருள் ரத்தினம்

தகுதி இருந்தும் சாதியால் வீழ்த்தப்பட்ட புஷ்பவனம் குப்புசாமி முழு விபரம்…

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு 14 டி.எம்.சி தண்ணீரை குறைத்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு பெருத்த ஏமாற்றளிப்பதாக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் கருத்து தெரிவித்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்த 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். தமிழகத்தில் இது தொடர்பாக இந்த தீர்ப்பை எதிர்கொள்வதில் சிக்கல் இருக்கிறது. காரணம் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை நிர்பந்திப்பதா ? அல்லது 14 டி.எம்.சி தண்ணீர் குறைக்கப்பட்டதற்கு எதிராக மேல் முறையீடு செய்வதா என்ற குழப்பத்தில் தமிழக அரசு தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதை ஆளும் அரசு கண்டு கொள்ளாத நிலையில், திமுக வருகிற 23-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுக, பாஜக, கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளாது. இக்கூட்டத்தில் கமல் கலந்து கொள்ளும் நிலையில், பாஜக, மற்றும் அதிமுக கலந்து கொள்ளுமா என்பது கேள்விக்குறிதான்.
மற்றபடி திமுகவின் கூட்டணிக் கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் , 23-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நோக்கம் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவே இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. இதே கருத்தை கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்க போட்டி போடும் பாஜகவும் உறுதி செய்கிற நிலையில், மக்களை திரட்டி போராடி அதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தாமல் வெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம், தீர்மானம், விரிவான அறிக்கைகள் மூலம் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிற திமுகவின் முயற்சிகள் பலனளிக்குமா என்பது கேள்விக்குறிதான்?

நிரவ் மோடி எனும் கேடி..!

ராகுல்காந்தி தலைமையில் முதல் கூட்டம்..!

மதுரையில் பள்ளி மாணவியை தீ வைத்து எரித்த கொடூரம்..!

காவிரி நீரை சிக்கனமாக செலவு செய்ய கமல் ஆலோசனை..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*