“அவர் ஆளுங்க வேற நம்ம ஆளுங்க வேற: கமல் பற்றி ரஜினி சொன்னது என்ன?

 

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் ஸ்லீப்பர் செல்கள் செயல்படுவார்கள்: தினகரன்
தினகரனை பிரபு சந்தித்தது ஏன் :பின்னணி தகவல்கள்…!

நடிப்பதை நிறுத்துங்கள் கமல் (#வீடியோ)

யைக் கேட்டால் கோபம் வருகிறது கமலுக்கு..!

பாஜகவை காப்பற்றுவதுதான் கமலின் மய்ய அரசியலா? 

மக்கள் நீதி மய்யம்: கமலின் சொதப்பல்கள்

பிப்ரவரி 21-ஆம் தேதி கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியையும் சின்னத்தையும் அறிவித்தது ரஜினி வட்டாரத்துக்கு பதட்டத்தை அதிகரித்துள்ளது. சினிமாவில் போட்டியாக இருந்த கமல் – ரஜினி, அரசியலிலும் போட்டியாளராக மாறி இருக்கின்றனர். கமல்ஹாசனின் அரசியல் மாநாட்டை பற்றி தெளிவான தகவல்களை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவரிடம் அளித்துள்ளனர்.அதில் ஊடகங்கள்தான் கமலின் அரசியல் வருகையை ஊதிப் பெருதாக்கிக் காட்டின. மக்களிடம் அது பற்றிய ஆரவாரம் எதுவும் இல்லை. சுமார் முப்பதாயிரம் பேர் மட்டுமே கமலின் மாநாட்டில் கலந்து கொண்டனர். நாம் லட்சக்கணக்கானவர்களை திரட்டி மாநாடு போல நடத்த வேண்டும் என்றும் ரஜினிக்கு எடுத்துச் சொல்ல அதை அமைதியாக கேட்ட ரஜினி.  “கமல் அரசியலுக்கு வந்திருப்பதை நாம் அசௌகரியமாக கருதுகிறோம் என்பதை யாரும் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம். அது உண்மையும் அல்ல சினிமாவில் கூட என் ரசிகர்கள் வேறு அவர் ரசிகர்கள் வேறு அரசியலிலும் அப்படித்தான் இருக்கும். அது பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் , ரஜினியின் மனதுக்குள் ஒரு பதட்டம் உருவாகி  இருப்பதால் ரஜினி மன்ற வேலைகளை முடுக்கி விட உத்தரவிட்டிருக்கிறார். அரசியலில் போட்டி இருந்தாலும் ரஜினி அதை வெளியில் காட்டிக் கொள்வதில்லை. எங்கள் இருவர் பாதையும் ஒன்று, மக்களுக்கு நல்லது செய்வதே எங்கள் எண்ணம் என்று தெரிவித்து வருகிறார். எனினும் தேர்தலில் இவர்கள் இருவருக்கும் இடையேயான போட்டி நிச்சயமாக இருக்கும். ரஜினியிடம் தோற்பதை கமலோ அல்லது கமலிடம் தோற்பதை ரஜினியோ அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது. அதனால் கமலின் அரசியல் நடவடிக்கைகளை ரஜினியின் தரப்பு கவனித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “எனது ரசிகர்களுக்கு அரசியல் கற்றுத்தர தேவையில்லை. பெரிய கட்சி தோற்றாலும் அதன் அடிப்படை கட்டமைப்புதான் அந்த கட்சியை காக்கிறது. கட்சிக்கான அடித்தளத்தை உறுதியாக அமைக்க வேண்டும். மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. செயலாளர்களை எல்லாம் தேர்ந்தெடுத்த பிறகு என் அரசியல் பயணம் பற்றி கூறுகிறேன்” என ரஜினி தெரிவித்துள்ளார்.

#கமல்_ரஜினி #அரசியலில்_கமல் #kamal_rajini_politics #tamilnadu_news #tamilnews

நடிப்பதை நிறுத்துங்கள் கமல் (#வீடியோ)

பாஜகவில் உச்சக்கட்ட கோஷ்டி மோதல் இராமசுப்ரமணியன் நீக்கம்:பின்னணி…!

ஒபிஎஸ் -இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கமிஷன் பிரிப்பதில் மோதல்..!

மோடிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு?

சீமான் சொல்லும் கமலின் மாற்று அரசியல் இதுதான்..!

கடனை செலுத்தும் வாசலை வங்கியே அடைத்து விட்டது” -நிரவ் மோடி வங்கிக்கு கடிதம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*