கேரளா: அரிசிக்காக கொல்லப்பட்ட ஆதிவாசி

“அவர் ஆளுங்க வேற நம்ம ஆளுங்க வேற: கமல் பற்றி ரஜினி சொன்னது என்ன?

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் ஸ்லீப்பர் செல்கள் செயல்படுவார்கள்: தினகரன்
தினகரனை பிரபு சந்தித்தது ஏன் :பின்னணி தகவல்கள்…!

நடிப்பதை நிறுத்துங்கள் கமல் (#வீடியோ)

யைக் கேட்டால் கோபம் வருகிறது கமலுக்கு..!

பாஜகவை காப்பற்றுவதுதான் கமலின் மய்ய அரசியலா? 

மக்கள் நீதி மய்யம்: கமலின் சொதப்பல்கள்

கேரளா மாநிலத்தில் ஒரு கும்பலால் ஆதிவாசி இளைஞர் ஒரு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரளா மாநிலம் அட்டப்பாடி பகுதியில் அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞரை ஒரு கும்பல் அடித்து சித்ரவதை செய்ததில் அவர் இறந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆதிவாசியை அடித்து சித்ரவரை செய்தது மட்டுமல்லாமல், செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. பசியின் காரணமாக இரவு நேரம் அரிசி திருடியிருக்கிறார் அந்த இளைஞர். அவரை அடித்து துன்புறுத்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

காவலர்களின் வண்டியில் செல்லும்போது உடல்நிலை மோசமாகி வாந்தி எடுத்திருக்கிறார். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லும்போது மயங்கிய நிலையில் கிடந்த அந்த இளைஞன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அகாலி காவல்துரையினர், “பிரேதப் பரிசோதனைக்கு பிறகே மற்ற விஷயங்கள் பற்றி கூற முடியும்” என்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் கேரள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் ஆதிவாசி மக்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*