சென்னை ஐஐடி அரசு விழாவில் சமஸ்கிருத பாடல் ஒலிக்கப்பட்டது..!

காவிரி வஞ்சகம் : மோடியின் நேரத்திற்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி!

காவிரி தமிழக தலைவர்களைச் சந்திக்க மோடி நேரம் ஒதுக்கவில்லை..!

தினகரனை மேலும் சந்திக்கப் போகும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார்?

கேரளா: அரிசிக்காக கொல்லப்பட்ட ஆதிவாசி

கமல் ஏன் அரசியலுக்குத் தகுதியற்றவர் :சாரு நிவேதிதா..!
மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் சென்னை ஐ.ஐ.டியில் சமஸ்கிருத மொழியில் அமைந்த முத்துசாமி தீட்சிதர் இயற்றிய ‘மகா கணபதி’ பாடல் ஒலிக்கப்பட்டது. சென்னை ஐஐடியில் தேசிய நீர்வழி, துறைமுக மேம்பாடு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் , தமிழக பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் சமஸ்கிருத மொழியில் அமைந்த மகா கணபதி பாடல் ஒலிக்கப்பட்டு அதற்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்திய நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
கர்நாடக இசையை விட மூத்த இசை தமிழிசை 16, 17-ஆம் நூற்றாண்டில் இலக்கணம் வகுப்பட்ட கர்நாடக இசையை விட தொல்காப்பியமும், சிலப்பதிகாரமும், தமிழ் இசையின் ஆழத்தையும், பழமையையும் உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் 16-ஆம் நூற்றாண்டில் இலக்கணம் உருவாக்கப்பட்ட கர்நாடக இசையை பழமையான இசை என்று பிரமாணர்கள் கூறி வருகிறார்கள்.மத்தியில் மோடி அரசு பதவியேற்ற பிறகு கர்நாடக இசைக்கும், வழக்கொழிந்து போன சமஸ்கிருதத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழுக்கு கொடுப்பதில்லை. இந்நிலையில்தான், தன் தாய்மொழியான சமஸ்கிருதத்தில் முத்துசாமி தீட்சிதர் இயற்றிய மகா கணபதி பாடல் ஐ.ஐ.டி அரசு விழாவில் ஒலிபரப்பட்டுள்ளது.மகா கணபதி பாடலை பெருவாரியான இந்துக்கள் கூட பாடுவதில்லை. மார்கழி பஜனையிலும், பிராமணர்கள் கலந்து கொள்ளும் மார்கழி இசை விழாவிலும் பாடப்படக் கூடிய மகாகணபதி பாடல் அரசு விழாவில் ஒலிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

#chennai_iit #சென்னை_ஐஐடியில்_மகாகணபதி #maga_ganapathy

நடிப்பதை நிறுத்துங்கள் கமல் (#வீடியோ)

கொள்கையைக் கேட்டால் கோபம் வருகிறது கமலுக்கு..!

பாஜகவை காப்பற்றுவதுதான் கமலின் மய்ய அரசியலா?

“நான் விரும்பித்தான் இஸ்லாம் தழுவினேன்” உச்சநீதிமன்றத்தில் ஹதியா..!

பாஜகவில் உச்சக்கட்ட கோஷ்டி மோதல் இராமசுப்ரமணியன் நீக்கம்:பின்னணி…!

ஒபிஎஸ் -இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கமிஷன் பிரிப்பதில் மோதல்..!

மோடிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு?

சீமான் சொல்லும் கமலின் மாற்று அரசியல் இதுதான்..!

கடனை செலுத்தும் வாசலை வங்கியே அடைத்து விட்டது” -நிரவ் மோடி வங்கிக்கு கடிதம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*