நடிகை ஸ்ரீதேவி மரணம் :முரண்பட்ட தகவல்கள்!

நடிகை ஸ்ரீதேவியை யாரும் கொலை செய்யவில்லை..!

காவிரி வஞ்சகம் : மோடியின் நேரத்திற்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி!

காவிரி தமிழக தலைவர்களைச் சந்திக்க மோடி நேரம் ஒதுக்கவில்லை..!

தினகரனை மேலும் சந்திக்கப் போகும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார்?

கேரளா: அரிசிக்காக கொல்லப்பட்ட ஆதிவாசி

கமல் ஏன் அரசியலுக்குத் தகுதியற்றவர் :சாரு நிவேதிதா..!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாலிவுட் சினிமாவில் உச்சம் தொட்டவர் ஸ்ரீதேவி. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் சினிமாவில் யாரும் தொட முடியாத நட்சத்திரமாக இருந்ததால் இந்தியாவில் அவரை அறிந்திராத சினிமா ரசிகர்கள் இல்லை. நேற்று முன் தினம் துபாயில் நடந்த உறவினர் திருமணத்திற்குச் சென்ற ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்ததாக செய்திகள் வெளியான நிலையில், அவரது மரணம் தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் கசிந்துள்ளது.
அவரது கணவர் போனி கபூர் ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக ஊடகங்களிடம் பேச மறுத்தார். உறவினர்களும் இறுக்கமாகவே இருந்தனர். அவர் மாரடைப்பால் இறந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்ட நிலையில் குளியல் அறை தொட்டியில் அவர் மூழ்கி உயிரிழந்ததாக துபாய் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீதேவியின் உடல் உடற்கூறாய்வோடு தடயவியல் சோதனையும் நடத்தப்பட்டது.இறந்தவர் முக்கியமான பிரமுகர் என்பதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு இதற்கு முக்கியத்துவம் கொடுத்தது. தடயவியல் சோதனையும் நடத்தப்பட்டதால் ஸ்ரீதேவி உடல் ஒப்படைக்கப்படுவதில் தாமதம் எழுந்தது.
இந்நிலையில் ஸ்ரீதேவி உடற்கூறாய்வு ரிப்போர்ட்டில் அவர் நீரில் மூழ்கிய விபத்தால் மரணமடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்து காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி மரணத்தில் சதிச்செயல் எதுவும் இல்லை என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஸ்ரீதேவியின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் அவர் ரத்தத்தில் ஆல்ஹகால் கலந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
மது போதையில் தவறுதலாக தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தோ, அல்லது நெஞ்சுவலி ஏற்பட்டதால் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தோ கூட ஸ்ரீதேவி இறந்திருக்கலாம். இன்னும் சில நாட்களில் ஸ்ரீதேவி மரணம் தொடர்பான முழு விபரமும் வெளியாகும் எனத் தெரிகிறது.நேற்று முன் தினம் இரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மது விருந்தில் பங்கேற்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு கணவருடன் நடனும் ஆடியது குறிப்பிடத்தக்கது.

நடிப்பதை நிறுத்துங்கள் கமல் (#வீடியோ)

கொள்கையைக் கேட்டால் கோபம் வருகிறது கமலுக்கு..!

பாஜகவை காப்பற்றுவதுதான் கமலின் மய்ய அரசியலா?

“நான் விரும்பித்தான் இஸ்லாம் தழுவினேன்” உச்சநீதிமன்றத்தில் ஹதியா..!

பாஜகவில் உச்சக்கட்ட கோஷ்டி மோதல் இராமசுப்ரமணியன் நீக்கம்:பின்னணி…!

ஒபிஎஸ் -இபிஎஸ் ஆதரவாளர்களிடையே கமிஷன் பிரிப்பதில் மோதல்..!

மோடிக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு?

சீமான் சொல்லும் கமலின் மாற்று அரசியல் இதுதான்..!

கடனை செலுத்தும் வாசலை வங்கியே அடைத்து விட்டது” -நிரவ் மோடி வங்கிக்கு கடிதம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*