ஓட்டுநர் கொலையா :அமைச்சர் பதில் சொல்ல முடியாமல் திணறல்..!

நெஞ்சுவலியால் துடித்த டிரைவரை டுவீலரில் அனுப்பிய அமைச்சர்: சாலையில் விழுந்து பரிதாப மரணம்..!

கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது: சிதம்பரத்திற்கும் குறி..!

ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்

ஸ்ரீதேவி உடல் அஞ்சலிக்குப் பின் தகனம்..!

தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுநராக இருந்த சவுந்தரராஜன் மர்மமான முறையில் மரணமடைந்தது தொடர்பாக நிருபர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார்.
சென்னை சூளைமேட்டியில் தங்கியிருக்கும் செஞ்சியைச் சேர்ந்த சவுந்திரராஜன் அமைச்சர் மணியனிடம் கார் ஓட்டுநராக இருக்கிறார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் பணிக்கு வந்தவருக்கு காலை நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆனால் அவரை காரில் அல்லது ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் டூ வீலரில் மருத்துவமனைக்கு அனுப்ப செல்லும் வழியிலேயே அவர் சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இது அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு சிக்கலை உருவாக்கியிருக்கிறது. உயிரிழந்த சவுந்திரராஜனின் மனைவி அமைச்சர் தன் கணவரை அடித்துக் கொலை செய்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியிருக்கும் நிலையில், அமைச்சர் மணியன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
“என் இல்லத்தில் பணியில் இருந்த போது இறந்த டிரைவர் சவுந்திரராஜனின் மரணம் துரதிருஷ்டவசமானது. அவர் காலை 4-30 மணிக்கு பணிக்கு வந்தார். காலை ரயில் நிலையத்தில் இருந்து என்னை அழைத்து வந்து வீட்டில் விட்டார். பின்னர் நான் தலைமைச் செயலகம் போன வேளையில். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. அவரே பக்கத்து வீட்டு அமைச்சர் வேலுமணியின் டிரைவருடைய டுவீலரில் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அவர் இறந்து விட்டதாகச் செய்தி வெளியானதும் நான் மருத்துவமனைக்குச் சென்றேன். அவரது உடலில் முகத்திலும்,கையிலும், காலிலும் காயங்கள் இருந்தது. அவரது மனைவிக்கு அங்கேயே ஆறுதலும் சொன்னேன். அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொன்னேன். உடலை ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு சென்னையில் குடியிருந்த வீட்டில் வைத்து பின்னர் எடுத்துச் செல்லுங்கள் என்று நான் தான் சொன்னேன். அதன் படி அவர்கள் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற போது நான் மாலை வைப்பதற்காக வீட்டிற்குச் சென்ற போது என் மீது புகார் சொன்னார்கள். முதலில் நான் அடித்துக் கொன்று விட்டதாகவும், பின்னர் போலீசை வைத்து அடித்து விட்டதாகவும், பின்னர் விபத்தை ஏற்படுத்தி கொன்று விட்டதாகவும் சொன்னார்கள். அப்போது நானே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உடலை பிரேதப்பரிசோதனை செய்யுங்கள் என்றேன். இது தொடர்பாக சில ஊடகங்கள் வெளியிடும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது, கவலையளிக்கிறது” என்றார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

அமைச்சர் பதிலளித்துக் கொண்டிருந்த போது நிருபர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.குறிப்பாக ஆம்புலன்சுக்கு ஏன் அழைக்கவில்லை. அவர் ஏன் இரண்டு நாட்கள் விடுப்பில் இருந்தால் என்பது போன்ற பல கேள்விகளை எழுப்ப அந்தக் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திணறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*