ஸ்ரீதேவி உடல் அஞ்சலிக்குப் பின் தகனம்..!

தீவைத்து எரிக்கப்பட்ட மாணவி மரணம்..!

நடிகை ஸ்ரீதேவி மரணம் :விசாரணை வளையத்தில் போனி கபூர்!

நடிகை ஸ்ரீதேவி மரணம் :முரண்பட்ட தகவல்கள்!

நடிகை ஸ்ரீதேவியை யாரும் கொலை செய்யவில்லை..!

காவிரி வஞ்சகம் : மோடியின் நேரத்திற்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி!

காவிரி தமிழக தலைவர்களைச் சந்திக்க மோடி நேரம் ஒதுக்கவில்லை..!

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று மும்பை கொண்டு வரப்பட்டது, இன்று மதியத்திற்கு மேல் 3.30 மணியளவில் அவர் உடல் தகனம் செய்யப்படுகிறது. திரு்மண விழா ஒன்றுக்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார் என்று முதலில் கூறப்பட்டது.பின்னர் அவர் மது அருந்திய நிலையில் ஏற்பட்ட விபத்தால் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்ததாக  உடற்கூறு அறிக்கையிலும், போலீஸ் விசாரணையிலும் தெரியவர துபாய் போலீசார் அவரது கணவர் போனி கபூரை விசாரித்து விட்டு.

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் எதுவும் இல்லை என்று அவரது உடலை எம்போமிங் செய்ய அனுமதி வழங்கினார்கள். எம்போமிங் செய்யப்பட்ட அவரது உடல் இந்திய தூதரக அதிகாரிகள் முன்னிலையில் கணவர் போனி கபூரிடம்  ஒப்படைக்கப்பட்டது. பின்னர் விமானம் மூலம் அவரது உடல் இந்தியாவுக்கு நள்ளிரவு வந்தடைந்தது.

இன்று காலை 9-30 முதல் பகல் 12-30 மணிவரை ஸ்ரீதேவியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அந்தேரியில் உள்ள செலிபரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்படுகிறது. பின்னர் 2 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்கி மும்பை வில்லர் பாலே மின் மயானத்தில் அவர் உடல் இறுதி சடங்கு செய்யப்பட்ட பின்னர் தகனம் செய்யப்பட இருக்கிறது.

ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த மும்பை சென்ற கமல் சென்னை திரும்பி விட்ட நிலையில், மீண்டும் அவர் செல்வாரா என்பது தெரியவில்லை. ரஜினி ,பாரதிராஜா போன்ற பிரபலங்கள் மும்பையில் தங்கியிருந்து அஞ்சலி செலுத்த காத்திருக்கிறார்கள்.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*