“சமூக மரியாதைக்கான சுமையை பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது: -பத்மாவத்தை முன் வைத்து..!

 

ஸ்டாலினை கண்ணின் இமை போல காப்பேன் :வைகோ

ஓட்டுநர் கொலையா :அமைச்சர் பதில் சொல்ல முடியாமல் திணறல்..!

நெஞ்சுவலியால் துடித்த டிரைவரை டுவீலரில் அனுப்பிய அமைச்சர்: சாலையில் விழுந்து பரிதாப மரணம்..!

கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது: சிதம்பரத்திற்கும் குறி..!

கட்டுரை – ரிதுபர்னா ராய்
தமிழில் :ஸ்நேகா
1303, சித்தூர் – ராஜஸ்தான் :

ரானா ராவல் சிங்கின் மனைவியான அழகி பத்மாவதியை அடைய சித்தூர் கோட்டையை தாக்குகிறார் தில்லியின் சுல்தான் அலாவுதீன் கில்ஜி. கில்ஜி தான் வெற்றி பெறப் போகிறார் என்பது அப்பட்டமானதும், அவர் முகத்தில் கரியை பூச ஆயிரக்கணக்கான ராஜபுத்திர பெண்களுடன் சேர்ந்து ‘ஜவ்ஹர்’ – சிதை ஒன்று அமைத்து அதில் விழுந்து உயிர் துறக்கும் சடங்கு – மேற்கொள்கிறார் பத்மாவதி.

மார்ச் 1947, தோவா கல்சா, பஞ்சாப் :

இந்தியாவில் பிரிவினைக்கு முன்னரே இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களும், சீக்கியர்களுக்குமிடையில் நடந்து கொண்டிருந்த மோதல்களின் முடிவாக பஞ்சாப்பில் வன்முறை பரவத் தொடங்கியது. 1946 ஆகஸ்டில் கொல்கத்தாவில் தொடங்கியது, முதலில் கிழக்கில் நோகாலிக்கும், மேற்கில் பீஹார், உத்திரபிரதேசத்திற்கும் இறுதியாக 1947 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் பஞ்சாப்பிற்கும் வந்து சேர்ந்தது.குறிப்பாக ஒரு சம்பவம், உயிரை உலுக்குவதாக இருக்கும். மார்ச் 1947ல் ராவல்பிண்டியில் இருக்கும் தோவா கல்சா கிராமம் தொடர்ந்து கடுமையான வன்முறையை சந்தித்துக் கொண்டிருந்தது. சீக்கியர்கள் அதிகம் இருக்கும் ஒரு கிராமத்தை இஸ்லாமியர்கள் ஒரு மாலை நேரம் தாக்குகிறார்கள். தாக்குதலில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள் சீக்கியர்கள். ஆனால், அடுத்த நாளே, ஆயிரக்கணக்கான இஸ்லாமியார்களின் படை ஒன்று திரண்டு வருகிறது. எல்லோரும் கொல்லப்பட போகிறார்கள் என்பது உறுதியாக தெரிந்ததும், பெண்கள் கிராமத்தில் இருக்கும் கிணற்றில் குதிக்க வேண்டும் என முடிவாகிறது. ஏறத்தாழ தொண்னூறு பெண்கள் ஒன்று கூடி ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதிக்கிறார்கள். சிலருடன் குழந்தைகளும் இருக்கின்றன. இறுதியில், அந்த கிணற்றில் மூழ்கும் அளவு தண்ணீர் இல்லாமல் போகிறது. ஆனாலும், சிலர் திரும்ப திரும்ப குதித்து உயிர் விட முயற்சி செய்கிறார்கள்.


நாட்டின் பிரிவினை கால நினைவுகளாக பல ஆண்டுகள் முன்பே படிந்த இந்த நினைவுக்கதைகள்தான் பத்மாவத் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது.
ஜவஹர் சடங்கும், ஆணாதிக்கமும். பத்மாவத் திரைப்படம் பல மாதங்களாக தலைப்பு செய்தியாக இருந்து கொண்டே இருக்கிறது. படத்தின் வெளியீட்டிற்கு முன்பு உருவான சர்ச்சைகள் காரணமாக பல்வேறு விதமான விமர்சனங்களும் பேட்டிகளும் வந்தபடியே இருக்கின்றன. போன வாரம் படத்தை பார்த்து,அதைப் பற்றி எழுதும் உந்துதல் வரும் வரை ‘பத்மாவத்’ பற்றி எல்லாவற்றையும் கேட்டாகிவிட்டது என்று தான் நினைத்திருந்தேன்.

படத்தின் விமர்சனங்களை எல்லாம் மிக ஆர்வமாக கவனித்து வருகிறேன். மிக அறுவையான படம் ( ராஜா சென், என் டி டி வி), இஸ்லாம் வெறுப்பு படம் ( தனில் தாக்கூர், தி வயர்) என்று விமர்சிக்கப்பட்டு, ஜவ்ஹாரை மகிமைப்படுத்தும் படம் (ஸ்வரா பாஸ்கர், தி வயர் ; வைஷ்னா ராய், தி ஹிந்து) என கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது இந்த படம்.

ஒவ்வொரு விமர்சனத்தின் நோக்கம் என்னவாக இருந்தாலுமே, பெரும்பாலான விமர்சனங்கள் இஸ்லாமிய மற்றும் ராஜபுத்திர அடையாளங்கள் எப்படி கையாளப்பட்டிருக்கின்றன என்பதை சுற்றியே வருகின்றன. ஆணாதிக்க ஆங்கிளுமே விவாதிக்கப்பட்டிருக்கிறது, ஆனால், அதுவும் ராஜபுத்திர அமைப்பில் தான் இருக்கிறது. இங்கே தான் நான் தலையிட நினைக்கிறேன்.

பத்மாவதியின் கதை எவ்வளவு புகழ் பெற்றதாக இருந்தாலுமே, அவருடைய தியாகத்திலும் உயீர் நீப்பிலும் ‘ராஜ புத்திர’ குணம் கொஞ்சம் கூட இல்லை. ராஜ புத்திரர்களுக்கு இருக்கும் கௌரவம், மரியாதை குறித்த கர்வத்தை எல்லாம் அவர்களே வைத்துக் கொள்ளட்டும். இருப்பினும், பெரும் ஆபத்து/ தோல்வி சமயத்தில் பெண்கள் உயிர் நீத்து தியாகம் செய்வதும், அவமரியாதைக்கு ஆளாவதை விட மரணத்தையே தேர்ந்தெடுக்கலாம் என்பதும் ராஜபுத்திரர்களின் வரலாற்றில் மட்டுமே இருக்கும் குணம் அல்ல. ராஜபுத்திர் வம்சத்தை சேர்ந்த பெண்கள் நெருப்பில் விழுந்து உயிர் விட்டது அதிகம் கொண்டாடப்படுகிறது, அவ்வளவே.

அலாவுதீன் கில்ஜி தன்னை கைப்பற்றிவிட்டால் உண்டாகும் இழுக்கிலிருந்து தப்பிக்க பத்மாவதி நெருப்பிற்கு இரையாகிறாள். அப்படி செய்வதால் அவளொரு அடையாளாமாக மாறுகிறாள் : சிட்டூர், ராஜபுத்திரபுத்திரர்களுக்கான அடையாளமாக மாறுகிறாள். இதே போலத் தான் தோவா கல்சாவின் பெண்கள் ஆறுபது ஆண்டுகள் கழித்து சீக்கிய சமூகத்தின் அடையாளமாக மாறினார்கள். ஒரு சமூகத்தின் மரியாதைக்கான சுமையை எப்போதுமே பெண்களின் உடல் தான் சுமக்கிறது.

சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்ட படைப்பான பத்மாவத்தை பார்க்கும் போது எனக்கு தலையில் வேறொரு படம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் தோவா கல்சாவை சேர்ந்த பெண்கள் அவர்கள் கிராமத்து கிணற்றில் குதிக்கும் காட்சி அப்படியே டிசால்வ் ஆகி பத்மாவதி நெருப்புக்குள் குதிக்கும் காட்சியை கற்பனை செய்துக் கொண்டேன் – ரங் தே பசந்தி படத்தில் தில்லியின் கல்லூரி மாணவர்கள் பகத் சிங்காகவும், அவருடைய புரட்சி படையாகவும் மாறுவது போல. ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா குறிப்பிடுவது போல, காலனியாதிக்க இந்தியாவிற்கு பிறகு எதுவும் பெரிதாக மாறிவிடவில்லை – ஒரு அதிகார அமைப்பின் இடத்தின் வேறொரு அதிகார அமைப்பு வந்து அமர்கிறது, அதிகார துஷ்பிரயோகம் குணமும் மாறாமல் ஒன்று போலவே இருக்கிறது.

நான் கற்பனை செய்து கொண்ட படத்தில் நம் சமூகத்தில் ஆணித்தரமாக பதிந்து போன ஆணாதிக்கத்தினால் இது போன்றதொரு லாஜிக்கை பார்க்க முடிந்தது. வெளிநாட்டு மன்னர் ஒருவர் படையெடுத்து வருவதால் நிலைகுலைந்து போயிருக்கும் பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த ராஜபுத்திரர்களோ, பக்கத்து கிராமத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நிற்கும் இருபதாம் நூற்றாண்டை சேர்ந்த சீக்கியர்களோ – சீன் என்னவாக இருந்தாலும், பெண்கள் தங்கள் உடலால் தான் பதலளிக்க வேண்டியிருக்கிறது.
தொடரும்..

 

#padmavath #padmavati #Padmaavat #Rani_Padmini #உடன்கட்டை_ஏறுதல் #இந்தியாவில்_பெண்_வாழ்வு

கட்டுரையாளர் குறிப்பு :

கட்டுரையாளர் : ரிதுபர்னா ராய் ஒரு பிரிவினை அறிஞர், பிரசிடெண்சி பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்; South Asian Partition Fiction in English: From Khushwant Singh to Amitav Ghosh என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார்

 

 

 

 

 

 

 

கொள்கையைக் கேட்டால் கோபம் வருகிறது கமலுக்கு..!

பாஜகவை காப்பற்றுவதுதான் கமலின் மய்ய அரசியலா?

“நான் விரும்பித்தான் இஸ்லாம் தழுவினேன்” உச்சநீதிமன்றத்தில் ஹதியா..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*