சிதம்பரத்தை குறி வைக்கும் சிபிஐ :அரசியல் பழிவாங்கல்?

ஸ்டாலினை கண்ணின் இமை போல காப்பேன் :வைகோ

ஓட்டுநர் கொலையா :அமைச்சர் பதில் சொல்ல முடியாமல் திணறல்..!

நெஞ்சுவலியால் துடித்த டிரைவரை டுவீலரில் அனுப்பிய அமைச்சர்: சாலையில் விழுந்து பரிதாப மரணம்..!

கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது: சிதம்பரத்திற்கும் குறி..!

ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்

ஸ்ரீதேவி உடல் அஞ்சலிக்குப் பின் தகனம்..!
ஆளும் பாஜகவுக்கு எதிராக முன்னாள் நிதி அமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு தேசிய அளவிலான ஊடகங்கள் பெரும் முக்கியத்துவம் கொடுக்கும்.மேலும் மோடியின் பொருளாதார நடவடிக்கைகளை மிகக் காட்டமாக ஊடகங்களில் விமர்சித்தும் வந்தார் சிதம்பரம். எனும் நிலையில்தான் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்திருக்கிறது.
லண்டன் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்தவரிடம் சென்ற சிபிஐ அதிகாரிகள் தனியாக பேச வேண்டும் என அழைத்துச் சென்று 45 நிமிடங்கள் பேசிய பின்னர் கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர்.
போலீசார் ஒருவாரம் போலீஸ் விசாரணைக்கு அனுமதி கேட்டும் நீதிமன்றம் கொடுக்கவில்லை. ஒரு நாள் அனுமதியை மட்டும் வழங்கியிருக்கும் நிலையில், கார்த்தி சிதம்பத்திற்காக மூத்த காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான அபிசேக் சிங்வி ஆஜராகி வருகிறார். அவர் கார்த்தி சிதம்பரத்திற்காக ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்வார்.
இந்நிலையில், சிபிஐ முன்னாள் நிதியமைச்சரும் கார்த்தி சிதம்பரத்தின் தந்தையுமான சிதம்பரத்தை விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேவைப்பட்டால் அவர் கைது செய்யப்படவும் கூடும் என்கிற நிலையில் அவர் டெல்லியில்தான் இருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*