மோசடி மன்னன் நிரவ் மோடி எங்கிருக்கிறார் என்பதைக் கூட இந்தியாவால் கண்டறிய முடியவில்லை!

”பாஜகவின் ஆணவத்திற்கு கிடைத்த தோல்வி” -ராகுல்
உற்பத்தி வீழ்ச்சி:ஜிஎஸ்டி வரி வரத்து குறைத்தது..!
“சமூக மரியாதைக்கான சுமையை பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது: -பத்மாவத்தை முன் வைத்து..!

மதுரையில் 2 ரவுடிகளை என் கவுண்டர் செய்த போலீஸ்..!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் பல்லாயிரம் கோடி ஊழல் செய்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடி எந்த நாட்டில் ஒழிந்திருக்கிறார் என்பதைக் கூட இந்திய அரசால் கண்டறிய முடியவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று வெளியுறவுத்துறை விளக்கமளித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூபாய் 12,636 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார் குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. சமீபத்தில் பிரதமர் மோடி இவரோடு சுவிஸ் நாட்டில் வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நிலையில் பெரும் சர்ச்சைகள் உருவானது. எங்கேயோ தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி வங்கி மீதே பழி சுமத்தியும், ஊழியர்களுக்கு பணம் ஊதியம் கொடுக்க முடியாது என்றும் மெயில் அனுப்பி வரும் நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என்ற கேள்வி ஊடகங்களில் விவாதத்திற்குள்ளாகி வருகிறது.
இந்த மோசடி தொடர்பாக சிபிஐ. அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக சர்வதேச இண்டர்போலின் உதவியையும் இந்தியா நாடியுள்ள நிலையில்,
நிரவ் மோடி அமெரிக்காவில் உள்ள நியுயார்க் நகரத்தில் இருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட் இந்திய செய்தி நிறுவனமான பிடிஐ இது குறித்து கேள்வி எழுப்பிய போது அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் “நிரவ் மோடி அமெரிக்காவில் உள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் குறித்து எமக்கு தெரியும். ஆனால் அந்த தகவலை எங்களால் உறுதி செய்ய முடியவில்லை” என்று தெரிவித்தனர்.
உலகத் தலைவர்களுடன் செல்வாக்கோடு இருப்பதாக கூறப்படும் மோடி இந்தியாவில் நடந்துள்ள மிகப்பெரிய இந்த வங்கி மோசடி பற்றி வாய் திறக்க மறுக்கிறார். உலக நாடுகளின் உதவியைப் பெற்று நிரவ் மோடி எங்கிருக்கிறார் என்பதைக் கூட பாஜக அரசால் கண்டு பிடிக்க முடியவில்லை.

சிதம்பரத்தை குறி வைக்கும் சிபிஐ :அரசியல் பழிவாங்கல்?

ஸ்டாலினை கண்ணின் இமை போல காப்பேன் :வைகோ

ஓட்டுநர் கொலையா :அமைச்சர் பதில் சொல்ல முடியாமல் திணறல்..!

நெஞ்சுவலியால் துடித்த டிரைவரை டுவீலரில் அனுப்பிய அமைச்சர்: சாலையில் விழுந்து பரிதாப மரணம்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*