அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!
மருத்துவக் கல்விக்குள் கிராமப்புற ஏழைகளும், பிறபடுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களும் நுழைய தடை விதிக்கும் அநீதியான தேர்வு முறையான நீட்டுக்கு எதிராக தமிழகம் கொந்தளித்து அடங்கியது. ஆனால் தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுக மத்திய அரசிடம் சராணகதி அடைந்ததாலும், மக்களுக்காக போராடும் திராணியை திமுக இழந்ததாலும் அனிதாவின் மரணத்தை தமிழகம் மறந்து விட்டது. தமிழகத்தின் அடிப்படை உரிமையான சமூக நீதிக்கு உலை வைத்து மருத்துவக் கல்வியை உயர்சாதியினர் எடுத்துக் கொள்ளும் ஜீவாதாரப்பிரச்சனையான நீட் எதிர்ப்பில் அனிதாவின் மரணம் கோபத்தையும், உஷ்ணத்தையும் உண்டாக்குவதற்கு பதிலாக கழிவிரக்கத்தையும், பரிதாபத்தையுமே உருவாக்கிக் கொடுத்தது.
சமூக நீதியின் மண் திராவிட மண் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை பட தமிழகத்தில் அதற்கான முகாந்திரம் இருக்கிறதா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. காரணம் ஆளும் கட்சியின் சராணகதி அரசியல். போர்க்குணம் இழந்த திமுகவின் அறிக்கை அரசியல். கடந்த ஓராண்டு காலமாக தமிழக அரசியல் தளத்தின் திமுகவின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்த்தால் இது புரியும். அல்லது நமது அண்டை மாநிலங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தாலாவது இதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் நீட் என்னும் கொடூரம் எத்தனை பெரிய சமூக நீதி மறுப்பு என்பதை புரிந்து கொண்ட ஆந்திர அரசு விழித்துக் கொண்டது. பாஜகவோடு கூட்டணி வைத்து வென்ற சந்திரபாபு நாயுடு மத்திய அரசின் திட்டங்களால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிறார். நானும் பாஜக கூட்டணியில் இருக்கிறேன் என்பதை காட்டிக் கொள்ளாமல் பாஜகவின் எதிரிக்கட்சி வரிசையில்தான் தான் உள்ளது போல ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு காட்டிக் கொள்ள வேண்டிய அளவுக்கு நெருக்கடி ஆந்திராவுக்குள் உருவாகி இருக்கிறது.
நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் தழுவிய ஒரு நாள் பந்தை நடத்தி முடித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. விளைவு மோடி அரசு அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. ஆனால் சமூக நீதியின் தொட்டில் என்றும் சமூக நீதியின் பிறப்பிடம் என்றும் பீற்றிக் கொள்ளும் தமிழகம் அனிதாவை கைவிட்டு நீட் தேர்வை ஏற்றுக் கொண்டது. இந்த அவலத்தின் துவக்கத்தை அனுபவிக்கப் போவது மக்கள் இல்லையா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*