தொடரும் தனுஷ் – அனிருத் சண்டை?

2018 ஆஸ்கர் விருதுகள்: வெற்றியாளர்கள் பட்டியல்

தாய்ப்பால் விழிப்புணர்வு அட்டைப்படம்: எழுத்தாளர் ஜிலு ஜோசப் மீது வழக்கு

“சமூக மரியாதைக்கான சுமையை பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது: -பத்மாவத்தை முன் வைத்து..!  

தனுஷ் நடிப்பில் உருவான ‘3’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன்பிறகு தனுஷ் – அனிருத் கூட்டணியில் உருவான அத்துனை பாடல்களும் செம ஹிட். ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’ பாடல்கள் எல்லாம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு கட்டத்தில் இவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதற்கு காரணமாக இரண்டு விஷங்கள் கூறப்படுகிறது

1) தனுஷின் சக போட்டியாளரான சிம்புவுடன் இணைந்து பீப் பாடல் சர்ச்சையில் சிக்கியது.

2) தனுஷ் – சிவகார்த்திகேயன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட பின்பும் சிவாவுடன் நட்பு பாராட்டுவது.

இந்த காரணங்களால்தான் தனுஷ் – அனிருத் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு தன் ஆஸ்தான இசையமைப்பாளராக சீன் ரோல்டனை பிக்ஸ் செய்தார் தனுஷ். ஆனால் அனிருத், தனுஷ் மீது எப்போதும் போல் மரியாதை வைத்திருக்கிறார். சமீபத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘காலா’ படத்தின் டீசரை பார்த்துவிட்டு அனிருத் புகழ்ந்திருக்கிறார். ஆனால் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் அனிருத் கமிட்டானதற்கு தனுஷ் தரப்பிலிருந்து எந்த ரியாக்சனும் இல்லை. இவர்கள் சண்டை எப்போதும் முடியென்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*