என்ன நடக்கிறது திரிபுராவில்?

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா மாநில சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. பாஜக ஆதரவாளர்கள் இந்த வெற்றியை பெருமளவில் கொண்டாடினார்கள். மோடி, “சூரியன் தோன்றும் போது சிவப்பாக இருக்கும். ஆனால் மறையும் போது காவியாக இருக்கும்” என வசனம் எல்லாம் பேசினார். நீண்டகால இடதுசாரி ஆட்சியை வீழ்த்திய மகிழ்ச்சியில், பாஜக-வினர் தலைகால் புரியாத ஆட்டம் போடத் துவங்கினர். பாஜக கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.

பாஜக கட்சியினர், மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களை சூறையாடி தீயிட்டு கொளுத்தியிருக்கின்றனர். இதில் 240-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இதுகுறித்து திரிபுராவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஹரிபதா தாஸ், “திரிபுராவில் பாஜக தன் ஊழியர்களை தீவிரவாதிகளாக மாற்றி வைத்திருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலங்களை எரித்து மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வெறி செயல்களின் உச்சகட்டம்தான் கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனனின் சிலையை புல்டோசர் கொண்டு அகற்றியது. திரிபுராவில் இன்னும் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது.

சிதம்பரம் :பாஜக பிடி இறுகிறது?

தாய்ப்பால் விழிப்புணர்வு அட்டைப்படம்: எழுத்தாளர் ஜிலு ஜோசப் மீது வழக்கு

“சமூக மரியாதைக்கான சுமையை பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது: -பத்மாவத்தை முன் வைத்து..! 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*