லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

திரிபுராவில் அமைக்கப்பட்டிருந்த லெனின் சிலையை பாஜகவினர் இடித்து அகற்றியதால் அம்மாநித்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
25 ஆண்டுகால மார்க்சிஸ்டுகளின் ஆட்சிக்கு விடை கொடுத்து பாஜக சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. ஆட்சியை பிடித்ததும் மார்க்சிஸ்டுகளுக்கு எதிரான பெரும் வன்முறை பாஜக, இந்துத்துவ குழுக்களால் முன்னெடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் தொண்டர்களின் வீடுகள், அலுவலகங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. அவர்களும் தாக்கப்பட்டார்கள். இந்நிலையில் தெற்கு திரிபுராவில் பிலோனியா எனும் இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சிக்காலத்தில் லெனின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அந்த சிலையை நேற்று புல்சோடர் மூலம் பாஜக தொண்டர்களும் இந்து அமைப்பினரும் இடித்து அகற்றினார்கள். இதனால் திரிபுராவில் பெரும் பதட்டம் நிலவுகிறது. ஆங்காங்கே வன்முறை வெடிக்கும் சூழல் எழுந்துள்ளதால் முழு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் :பாஜக பிடி இறுகிறது?

தாய்ப்பால் விழிப்புணர்வு அட்டைப்படம்: எழுத்தாளர் ஜிலு ஜோசப் மீது வழக்கு

“சமூக மரியாதைக்கான சுமையை பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது: -பத்மாவத்தை முன் வைத்து..! 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*