#WhoKilledUsha? கர்ப்பிணி பெண்ணை மிதித்தே கொன்ற திருச்சி போலீஸ் :மக்கள் மீது கொலை வெறி தாக்குதல்!

#WhoKilledUsha?

ஒட்ட நறுக்கணும் எச்.ராஜாவோட :கோவன் பாடல்!

உத்திரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு பதட்டம்!

எச்.ராஜா மன்னிப்பை ஏற்க மறுப்பு :தமிழகம் முழுக்க போராட்டம்!

எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது: சத்யராஜ் (#video)

மீண்டும் எரிகிறது கொழும்பு:அவசர நிலை பிரகடனம்
கொல்கொத்தாவில் மோடி உருவ பொம்மை எரிப்பு!
நாளை உலக மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் திருச்சியில் ஹெல்மெட் அணிவில்லை என்ற காரணத்தைக் கூறி வண்டியில் சென்ற தம்பிகளை எட்டி மிதித்ததில் கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பத்தால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த ராஜா -உஷா என்ற தம்பதியினர் ( உஷா கர்ப்பிணிப்பெண் ) அவர்களது இருசக்கர வாகனத்தில் திருச்சி திருவெறும்பூர் என்ற பகுதியைக்கடக்கும்போது , வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் அவரது வண்டியை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.
காரணம் வண்டியில் வந்த ராஜா- உஷா தம்பதிகள் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. போலீஸ்காரர் வண்டியை நிறுத்த சொன்னதும் ராஜா வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார். ஆத்திரமடைந்த போக்குவரத்து காவலர் காமராஜ் இரு சக்கர வாகனத்தில் வெறித்தனமாக துரத்திச் சென்று ரவுண்டானா அருகே அவர்களது வாகனத்தின் அருகில் சென்று ராஜாவின் வாகனத்தின் மீது ஓங்கி உதைக்க அது அந்த உதை உஷா மீது விழுந்திருக்கிறது. நிலை தடுமாறிய தம்பதிகள் இருவரும் சாலையில் விழ பின்னால் வந்த வாகனம் உஷா மீது ஏறி அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து பல்லாயிரம் மக்கள் திரண்டு போராட்டங்களில் ஈடுபட அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்திருக்கிறது போலிஸ். பலரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலரை காணவில்லை என்று கூறப்படுகிறது. திருச்சியில் பெரும் தட்டம் நிலவுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*