செயின்ட் ஜோசப் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியவர்கள் அநாதையாக மரணம்!

எச்.ராஜா மன்னிப்பை ஏற்க மறுப்பு :தமிழகம் முழுக்க போராட்டம்!

எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது: சத்யராஜ் (#video)

மீண்டும் எரிகிறது கொழும்பு:அவசர நிலை பிரகடனம்
கொல்கொத்தாவில் மோடி உருவ பொம்மை எரிப்பு!
கடந்த பல ஆண்டுகளாக செங்கல்பட்டு அருகில் உள்ள பாலேஸ்வரத்தில் செயின்ட் ஜோசப் முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. அதில் இறக்கும் தருவாயில் உள்ள முதியவர்களை போலீஸ் அனுமதியோடு கொண்டு வந்து அவர்களை மரணிக்கும் வரை பாதுகாத்து ஆறுதல் அளித்து வந்தது அந்த நிறுவனம். தங்கள் இல்லத்தில் இறப்பவர்களை அங்கேயே அடக்கம் செய்தும் வந்தது. இந்நிலையில், அந்த இல்லத்தில் முதியவர்களின் பிணங்களை எரித்து வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் என்று வதந்தி பரப்பியதை அடுத்து அந்த இல்லம் மூடப்பட்டது. அந்த இல்லத்தில் இருந்த பல நூறு முதியவர்களை அள்ளிச் சென்ற அரசு அரசு மருத்துவமனையில் கொட்டிச் சென்றது.
இல்லம் மூடப்பட்டது தொடர்பாக பல விளக்கங்களை இல்ல நிர்வாகிகள் கொடுத்தும் அதை அரசு கேட்கவில்லை. ஆனால் இப்போது அப்படி எடுத்துச் செல்லப்பட்ட பல முதியவர்கள் போதுமான உணவும், பராமரிப்பும் இன்றி மடிந்து வருகிறார்கள். அப்படி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இறந்து கொண்டிருக்கும் முதியவர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் பேராசிரியர் அ.மார்க்ஸ் இது பற்றி இப்படி எழுதியிருக்கிறார் //இதோ ஒருவர் செத்துக் கொண்டுள்ளார். செங்கல்பட்டு, பாலேஸ்வரம் இறக்கும் தறுவாயில் உள்ளோர் பராமரிப்பு மையத்தை இழுத்து மூடி, அங்கு பராமரிக்கப்பட்டு இருந்தோரை பல இடங்களுக்கு மாற்றியதே தமிழக அரசு…. அவர்களில் ஒருவர்…. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இதோ செத்துக் கொண்டுள்ளார்….
கண்ணியமான சாவு என்பதன் பொருள் தெரியாதவர்களுக்கு.
இது அதன் எதிர்மறை….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*