உஷா மரணம்: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு?

”என்னை லாறி ஏற்றி கொலை செய்யப் பார்த்தார்கள்” – பிரவிண் தொகாடியா பகிரங்க குற்றச்சாட்டு

எச்.ராஜா மன்னிப்பை ஏற்க மறுப்பு :தமிழகம் முழுக்க போராட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை அடுத்த சூலமங்கலம் புதுத்தெருவைச் சேர்ந்த ராஜா, தன் 3 மாத கர்ப்பிணி மனைவி உஷாவைக் காமராஜ் என்ற காவலரின் கொடுஞ் செயலால் இழந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து முழு அறிக்கையை வெளியிட தலைமைச் செயலருக்கும் டிஜிபிக்கும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஜா தன் 3 மாத கர்ப்பிணி மனைவி உஷாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு திருச்சியில் நடக்கும் நண்பரின் திருமணத்துக்கு செல்லும்போது துவாக்குடி டோல் பிளாசா அருகே காவல்துறையினரால் ஹெல்மெட் அணியாததற்காக தடுத்து நிறுத்தப்பட்டார். வண்டியில் லக்கேஜ் அதிகமாக இருந்ததால் சுதாரித்து நிறுத்த முயன்ற ராஜாவை காமராஜ் எனும் காவலர் சட்டையை பிடித்து இழுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாது வண்டி சாவியையும் பறித்துக் கொண்டார். பின்னர் நடந்த விவாதத்துக்கு பிறகு வண்டி சாவியை கொடுத்துவிட்டு, அடுத்த வண்டிகளை கவனிக்க தொடங்கியுள்ளார். அதனால் பிரச்சனை முடிந்ததென ராஜாவும் உஷாவும் வண்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டனர். சிறிது தூரம் சென்றப் பிறகு காவலர் துறத்தி வருவதாக உஷா கூறியிருக்கிறார். ராஜா வண்டியை நிறுத்தும் முன்பே காமராஜ் மிருகத்தனமாக வண்டியை உதைத்திருக்கிறார். இதில் 3 மாத கர்ப்பிணியான உஷா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பாகவும் மற்ற கட்சிகள் சார்பாகவும் நிதியுதவி அறிவிக்கப்பட்டு வருகிறது. உஷாவின் மரணத்துக்கான நீதி இன்னும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.

இந்நிலையில் தலைமைச் செயலரும் டிஜிபியும் இதுகுறித்த முழு அறிக்கையை இன்னும் 4 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டுமென தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் எரிகிறது கொழும்பு:அவசர நிலை பிரகடனம்
கொல்கொத்தாவில் மோடி உருவ பொம்மை எரிப்பு!

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

இலங்கையில் சமூக வலைத்தளங்களை முடக்கியது இலங்கை அரசு!

எச்.ராஜா கருத்து காட்டுமிராண்டித்தனமானது :ரஜினிகாந்த்

ஒட்ட நறுக்கணும் எச்.ராஜாவோட :கோவன் பாடல்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*