”என்னை லாறி ஏற்றி கொலை செய்யப் பார்த்தார்கள்” – பிரவிண் தொகாடியா பகிரங்க குற்றச்சாட்டு

உத்திரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பு பதட்டம்!

எச்.ராஜா மன்னிப்பை ஏற்க மறுப்பு :தமிழகம் முழுக்க போராட்டம்!

எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது: சத்யராஜ் (#video)

மீண்டும் எரிகிறது கொழும்பு:அவசர நிலை பிரகடனம்
கொல்கொத்தாவில் மோடி உருவ பொம்மை எரிப்பு!
விஷ்வ ஹிந்து பரிசத் என்ற இந்துத்துவ அமைப்பின் அகில இந்திய தலைவரான பிரவீண் தொகாடியா பாஜக மீதும் அதன் தலைவர்களான அமித்ஷா, மோடி மீதும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.
சமீபத்தில் தன்னை கொலை செய்ய சதி நடப்பதாக குற்றம் சுமத்தியிருந்தார்.இந்நிலையில், குஜராத் மாநிலம் காமரேஜ் எனும் இடத்தில் அவர் சென்ற கார் விபத்திற்குள்ளானது. பின்னால் வந்த லாறி ஒன்று வேகமாக அவர் கார் மீது மோதியதில் அவரது புல்லட் ஃபுரூப் கார் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், “இசட் பிரிவு பாதுகாப்புள்ள எனக்கு குஜராத் மாநில போலீசார் உரிய பாதுகாப்பு தரவில்லை.என் காருக்கு முன்னே பாதுகாப்பு வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. இது அப்பட்டமான கொலை முயற்சி அவர்கள் என்னை கொலை செய்ய நினைக்கிறார்கள்” என்று குற்றம் சுமத்தினார்.
அவரது குற்றச்சாட்டில் நேரடியாக யாருடைய பெயரையும் கூறவில்லை என்றாலும் தொடர்ந்து அவர் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*