மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

முப்பதாயிரம் விவசாயிகள் மும்பையில் இருக்கும் சட்டமன்ற கட்டிடத்தை முற்றுகையிட பேரணியாக திரண்டு சென்றுக் கொண்டிருக்கிறனர். தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை கட்டிடத்தை முற்றுகையிடப்படியே போராட்டம் செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கும் விவசாயிகளை அகில பாரதிய கிசான் சபா (ABKS) வழி நடத்தி வருகிறது.

கடந்த புதன் அன்று நாசிக்கில் தொடங்கிய பேரணி, வியாழன் அன்று தானே மாவட்டத்தின் ஷாஹாபூர் நகரை வந்தடைந்தது. ஞாயிறன்று மும்பை நகரை வந்தடைய திட்டமிட்டிருக்கிறார்கள். மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நடந்துக் கொண்டிருப்பதனால், இந்த முற்றுகை போராட்டம் பாரதிய ஜனதா தலைமையில் இயங்கும் மஹாராஸ்டிரா அரசுக்கு பிரச்சினையை பெரும அச்சுறுத்தலாக இருக்கும்.

அகில பாரதிய கிசான் சபாவின் மாநில செயலாளர் அஜித் நவாலே, “ அரசு கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்திருந்தும், 1753 விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த திட்டம் முறையே செயல்படுத்தப்படவில்லை” என்று சொல்லியிருக்கிறார்.

கடந்த மாதம் பெய்த மழை காரணமாக பயிர்களை இழந்திருக்கும் விவசாயிகளுக்கு உதவியாக, ஒரு ஏக்கர் நிலத்திற்கு நாற்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறது விவசாயிகளின் சங்கம். கடந்த வருடம் பல வேலை நிறுத்தங்களை நடத்தி அதன் விளைவாக அரசை கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவிக்க வைத்த பல விவசாய அமைப்புகளில் முக்கியமானது அகில பாரதிய கிசான் சபா.

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.

*