துப்பாக்கி வைத்து போட்டோ எடுத்ததில் விபரீதம்: ஒருவர் பலி?

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

துப்பாக்கியை பிடித்தபடி ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்த பதினேழு வயது மாணவன், ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்த தன்னுடைய உறவினரை அறியாமல் சுட்டுக் கொன்ற சம்பவம் தில்லியில் நடந்திருக்கிறது. தெற்கு தில்லியில் சரிதா விஹார் காவல் நிலையத்தில் இதுகுறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கொல்லப்பட்ட பிரசாந்த் சௌகன், 23 வயது, தில்லியில் ஆசிரியராக இருந்தவர். மாலை ஐந்து மணிக்கு நடந்த விபத்தின் போது உயிரிழந்திருக்கிறார். கொலை செய்தவர் சரிதா விஹார் அருகில் இருக்கும் பள்ளியொன்றில் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். பதினெட்டு வயதிற்கும் கீழ் இருப்பதால் அவருடைய பெயர் வெளியிடப்படமாட்டாது.

“சம்பவம் நடந்த போது பிரசாந்தும் மற்ற சிறுவனும் ஒரு அறையில் இருந்தனர். அவருடைய அம்மா துணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்தார். கப்போர்டில் இருந்து துப்பாக்கியை எடுத்த சிறுவன், பிரசாந்திடம் போட்டோ எடுக்குமாறு கேட்டுக் கொண்டான். துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு போஸ் செய்து கொண்டிருந்த போது, தெரியாமல் ட்ரிக்கரை இழுத்துவிட்டான். பிரசாந்தின் நெஞ்சில் வலது புறம் குண்டு பட்டது, அவன் உடனேயே தரையில் மயங்கி விழுந்தான்” என ஷிவம் சௌஹன் எனும் மற்றொரு உறவினர் தெரிவித்திருக்கிறார்.

குண்டு சத்தம் கேட்டவுடனேயே, சிறுவனின் அம்மாவும் அக்காவும் அடுத்த அறைகளிலிருந்து ஓடி வந்திருக்கின்றனர். பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் போய் சொல்லி உதவி கேட்குமாறு அவர்கள் சொன்னதும் சிறுவன் பக்கத்து வீடுகளுக்கு சென்று நடந்ததை தெரிவித்திருக்கிறான். பிரசாந்த் சௌகன் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் மீதும், துப்பாக்கியை ஒழுங்காக பராமரிக்காததால் தந்தையின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*