பாண்டியராஜனுக்காக பாடிய சிம்பு

சிம்பு மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சரியாக நடந்து கொள்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த பட வேலைகளுக்கு நடுவில் தன் மற்ற பணிகளையும் அவர் கவனித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்விக்கா அவர் ஒரு பாடலை பாடியுள்ளார்.

பாண்டியராஜனின் மகன் பிரித்வி நடிக்கும் ‘தொட்ரா’ படத்தில் பக்கு பக்கு என ஆரம்பிக்கும் பாடலை சிம்பு பாடியிருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு ஓகே சொல்வாரா என யோசித்தார்களாம். ஆனால் அவர் பாண்டியராஜனுக்காக உடனே சம்மதித்ததோடு பாடி அசத்தியது படக்குழுவுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் சிம்புவை பாராட்டியுள்ளார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*