”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

எச்.ராஜா கருத்து காட்டுமிராண்டித்தனமானது :ரஜினிகாந்த்

ஒட்ட நறுக்கணும் எச்.ராஜாவோட :கோவன் பாடல்!

நடந்து முடிந்த குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும் என்று பதிதார் போராட்டக் குழு தலைவர் ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.
பட்டேல் சாதியினருக்கு இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் பட்டேல் போராடி வருகிறார். இவருக்கு பட்டேல் சாதியினரிடம் பெரும் செல்வாக்கு உள்ளாது. முன்னர் மோடி ஆதரவாளராக இருந்த ஹர்திக் பட்டேல் பின்னர் பாஜகவுக்கு எதிராக திரும்பினார். காங்கிரஸ் கட்சியை ஆதரித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 92 இடங்களைப் பிடித்து ஆட்சியை பிடித்தது. ஹர்திக் பட்டேல் ஆதரித்தும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. இந்த தேர்தலின் போது ராகுல்காந்தியை ஹர்திக் பட்டேல் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியானது அதை ஹர்திக் பட்டேல் மறுத்தும் வந்தார். இப்போது இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்:-
“ கடந்த குஜராத் மாநில தேர்தலின் போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோரை சந்தித்தேன் .ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுலை நான் சந்திக்கவே இல்லை. ஊடகங்கள் நான் அவரை சந்தித்ததாக செய்திகள் வெளியிட்டன. ராகுல்காந்தியை சந்திப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல அப்படி நான் அவரை சந்தித்திருந்தால் பாஜக வென்றிருக்காது. 99 இடங்களுக்கு பதிலாக வெறும் 79 இடங்களை மட்டுமே பாஜக பெற்றிருக்கும்.குஜராத் தேர்தலின் போது ராகுல்காந்தியை சந்திக்காமல் இருந்தது என் தவறு” என்றார் ஹர்திக் பட்டேல்.

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

இலங்கையில் சமூக வலைத்தளங்களை முடக்கியது இலங்கை அரசு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*