வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

எச்.ராஜா கருத்து காட்டுமிராண்டித்தனமானது :ரஜினிகாந்த்

ஒட்ட நறுக்கணும் எச்.ராஜாவோட :கோவன் பாடல்!
ஆர்.கே. நகரில் தினகரன் போட்டியிட்டு வென்ற குக்கர் சின்னத்தையும், அவர்கள் கேட்கும் பெயரையும் கட்சிக்கு ஒதுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வருகிற மார்ச் 15-ஆம் தேதி மதுரையில் புதிய கட்சியின் பெயரை அறிவிக்கிறார் தினகரன்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றலாம் என்று தினகரன் எதிர்பார்த்திருந்த நிலையில், நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை. ஒபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான அதிமுகவை மத்தியில் ஆளும் பாஜக அரசு காப்பாற்றி வருவதால் அது கவிழவும் இல்லை. இந்நிலையில், அனைத்திந்திய அம்மா அண்ணா திமுக, எம்.ஜி,ஆர். அம்மா திமுக, எம்.ஜி.ஆர் அம்மா திராவிடர் கழகம் என மூன்று பெயர்களை குறிப்பிட்டு இதில் ஒரு பெயரை தனக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் மதுரையில் வருகிற 15-ஆம் தேதி மாநாடு நடத்தி கட்சியை அறிவிக்க இருக்கிறார்.
#TTVDinakaran #TamilNews #tamilnadu_news #tamil_political_news

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*