குரங்கனி காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் பலி?

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தேனி மாவட்டம் போடி அருகில் உள்ள குரங்கனி வனப்பகுதி சிறந்த கோடை வாஸ்தலம் ஆகும், ‘இதை டாப்ஸ்டேசன் என்று கூறுகிறார்கள்.
கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலைப்பகுதிக்கு 15 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். அப்படி டிரக்கிங் சென்ற 39 பேர் காட்டுத்தீயில் சிக்கியதாக தெரிகிறது.
குரங்கனி காட்டுத்தீ கடந்த மூன்று நாட்களாக எரிந்து வரும் நிலையில் வனத்துறையின் அனுமதியோடு தனியார் நிறுவனங்கள் மக்களை டிரக்கிங் அழைத்துச் சென்றுள்ளனர்.
இவர்களில் 25 பேர் மீட்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் 50% சத வீத தீக்காயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 10 பேர் வரை மரணடமைந்துள்ளார்கள். மேலும் 15 பேர் பற்றிய தகவல் எதுவும் இல்லை. தமிழக அமைச்சர்கள் அப்பகுதியில் முகாமிட்டிருக்கிறார்கள்.

இது, சுமார் 2 ஆயிரம் அடி உயரம் கொண்ட அடர்ந்த வனப்பகுதி ஆகும். இயற்கை எழில்கொஞ்சும் இந்த வனப்பகுதி சிறந்த கோடை வாசஸ்தலம். இங்கு செல்வதற்கு சாலை வசதி கிடையாது. குரங்கணி வரை மட்டுமே, வாகனங்களில் செல்ல முடியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*