தனியார் நிறுவனங்களை தத்தெடுத்த மோடி: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட முக.ஸ்டாலின் கோரிக்கை

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் நலனையும் காக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிடவேண்டும் என மத்திய அரசுக்கு
மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீத்தேன் திட்டம் தொடர்பாக, திமுக தனது நிலையைத் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறது. ஆய்வுப் பணிக்காக மட்டுமே திமுக அரசில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது என்பதையும், எக்காரணம் கொண்டும் விவசாயிகளின் நலன்கள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்பதை அன்று முதல் இன்று வரை உறுதியாகச் சொல்லி வருவதுடன், போராட்டக் களத்தில் இரவும் பகலும் ஈடுபட்டிருக்கும் மக்களையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

இந்நிலையில்தான் மீத்தேன், ஷேல்கேஸ் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு ஒற்றை உரிமம் வழங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு கொண்டு
வந்துள்ளது. இதன்படி, எண்ணெய்க் கிணறுகள் தோண்ட தேவைப்படும் இடங்களை மத்திய அரசு நிறுவனம் ஆய்வு செய்து கண்டறிவதற்குப் பதில், தனியார்
நிறுவனங்களே அதனைத் தேர்ந்தெடுக்க, மத்தியில் ஆட்சி செய்யும் தனியார் நிறுவனங்களை தத்தெடுத்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனுமதி
அளித்துள்ளது. இதற்கு முன்பு, கச்சா எண்ணெய், மீத்தேன், ஷேல்ஆயில் மற்றும் காஸ் எடுக்க தனித்தனியாக லைசென்ஸ் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இருந்தன.
தற்போது அவை நீக்கப்பட்டு.

ஹெல்இஎல்பி-ஓஏஎல்பி என்ற கொள்கைப்படி ஒரே உரிமம் பெற்றாலே போதும், அதை வைத்து எல்லாவித ஹைட்ரோ கார்பன்களையும் எடுக்க முடியும் என்ற வகையில்
இந்த புதிய திருத்தத்தில் விபரீதமான வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனைத் தமிழ் நாளேடுகளும் ஆங்கில நாளேடுகளும் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளன. இந்தியா
முழுவதும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள சர்வதேச டெண்டர், மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் மூலமாக கடந்த ஜனவரி 19ம் தேதி வெளியிடப்பட்டது.
100 சதவீதம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் உள்பட உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வரும் ஏப்ரல் 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் நிறுவனங்களுக்கு வருவாய்ப் பங்கீடு அடிப்படையில் ஆய்வு மற்றும் எண்ணெய், எரிவாயு உற்பத்திப் பணிகளைத் தொடங்க வருகிற ஜூன் மாதம்
அனுமதி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் மரக்காணம் முதல் கன்னியாகுமரி வரை 2,40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான நிலம் மற்றும் கடல் பகுதிகள் காவிரி வடிநில
பகுதியாக அறிவிக்கப்பட்டு, நிலத்தடி எரிபொருள் வள இருப்பு மண்டலமாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நிலப்பகுதி, 2 கடல் பகுதிகள் என புதிய
பகுதிகளில் முதல்கட்டமாக 4,099 சதுர கி.மீ. பரப்பளவில் 4 கிணறுகள் அமைக்கப்பட உள்ளன.
அதன்படி, கடலூர் மாவட்டம் தியாகவள்ளி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் வரையிலான 731 சதுர கி.மீ. நில பகுதிக்குள் 10 கிணறுகள், புதுச்சேரி
அருகே மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சதுர கி.மீ. கடல் பகுதியில் 4 கிணறுகள், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம்
வேளாங்கண்ணியை அடுத்த புஷ்பவனம் வரை 2,574 சதுர கி.மீ. கடல் பகுதியில் 10 கிணறுகள் என மொத்தம் 24 கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. காவிரி டெல்டா
பகுதியை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என திமுக தமிழ்நாட்டில் உள்ள பிற அரசியல் கட்சிகளும் விவசாய
அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், அதற்கு நேர்மாறாக, விவசாயத்தை முற்றிலும் அழித்து விவசாயப் பெருமக்களை நடுத்தெருவில் நிறுத்தும் வகையில், ஹைட்ரோகார்பன் கிணறுகளை
தோண்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிப்பது, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கி பாழ்படுத்த நினைக்கும் பயங்கரமாகும். தொடர்ந்து வலிமையாக எழுந்து வரும்
எதிர்குரலுக்குச் செவிமடுத்து, காவிரிப் படுகை விவசாயிகளையும் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வேளாண் நலனையும் காக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும்
திட்டத்தை முற்றிலுமாகக் கைவிடவேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டு மக்களை மீண்டும் மீண்டும் போராட்டக் களத்திற்கு மத்திய அரசு அழைக்க வேண்டாம்! அவர்களது பொறுமையைச் சோதித்துப் பார்த்திட எண்ணவேண்டாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சங்கர் சமூகநீதி அறக்கட்டளை அறிமுக விழா

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

கௌரி லங்கேஷ் வழக்கில் முதல் கைது!

எச்.ராஜா கருத்து காட்டுமிராண்டித்தனமானது :ரஜினிகாந்த்

ஒட்ட நறுக்கணும் எச்.ராஜாவோட :கோவன் பாடல்!

மும்பை: சட்டமன்றத்தை முற்றுகையிட திரண்டு செல்லும் விவசாயிகள் பேரணி (#video)

நாகலாந்து: பணத்தை அள்ளி வீசிய பாஜக பிரமுகர் (#viral_video)

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்! 

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை ரஜினிக்கு ஸ்டாலின் பதில்!

லெனின் சிலையை இடித்து பாஜக வெறியாட்டம்!

அனிதாவை மறந்த தமிழகம்: விழித்துக் கொண்ட ஆந்திரம்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

பாரதிய ஜீஸஸ் பார்ட்டி: திரிபுரா வெற்றி ரகசியம்!
கோவா மணிப்பூர் வரிசையில் கவர்னரை வைத்து மேகாலயாவில் ஆட்சியை பிடித்த பாஜக!

திரிபுராவில் மார்க்சிஸ்டுகளை தேடி தேடி வேட்டையாடும் பாஜகவினர்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*