வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

இந்தியாவில் பல விதமான கல்வித் திட்டங்கள் உள்ளன. இதில் சி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசின் பாடத்திட்டமும் ஒன்று, இந்த பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய பாடங்களும், தேர்வுகளில் கேள்விகளும் அடிக்கடி கேட்கப்படுவது உண்டு. இதற்கு அவ்வப்போது எதிர்ப்புகள் எழுந்து பாடங்களை நீக்குவதும் உண்டு. இந்நிலையில் இப்போது நடந்து வரும் சி.பி.எஸ்.சி  தேர்வுகளில் வர்ணாஸ்ரம தர்மத்தின் படி கீழான சாதி எது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது, 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சமூகவியல் பாடத்திட்டத்தின் கீழ்

இந்துமத வர்ணாசிரமத்தின்படி மிகக்கீழான ஜாதி எது ??
பதில்கள்
1. பிராமணர்கள் 2.சூத்திரர்கள்
3.சத்திரியர்கள் 4.வானப்ரஸ்தர்கள்.

தீண்டாமையை ஒரு குற்றச் செயல் என்றும் மாணவர்களுக்கு போதிக்கும் காலம் போய் வர்ணாஸ்ரம தர்மத்தை மாணவர்களுக்கு போதிக்கும் செயலை சி.பி.எஸ்.சி துவங்கியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*