கார்த்தியை கைது செய்வதில் அமலாக்கத்துறை தீவிரம்!

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தீர்மானம்:கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு!

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

காவிரி மேலாண்மை வாரியம் :மோடி வலையில் வீழ்ந்த ஒபிஎஸ் -இபிஎஸ்!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவதில் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ அவரை கைது செய்துள்ளது. அவர் டெல்லி தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அமலாக்கத்துறையும் அவரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது.
இதே வழக்கில் அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் வருகிற 20-ஆம் தேதி வரை தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய அனுமதி கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் கார்த்திக் சிதம்பரம் கேவியெட் மனுத்தாக்கல் செய்துள்ளதால் அவரது தரப்பு வாதத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் கைது உத்தரவை பிறப்பிக்காது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை மறுநாள் வருகிறது. இதனிடையே, கார்த்தி சிதம்பரம் ஜாமின் மனு மீதான வழக்கு விசாரணையிலிருந்து டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரஜித் கவுர் விலகியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*