காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு!

சிதம்பரம் விரைவில் கைதாவார்: சுப்பிரமணியசாமி

”விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்த படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கவிரி நதி நீர்  பங்கீட்டுத் திட்டம் என்ற புதிய அமைப்பை உருவாக்க  பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்திற்கான தண்ணீர குறைத்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடந்த நிலையில், பிரதமர் மோடி தமிழக தலைவர்களை சந்திக்கவில்லை. ஆனால் நான்கு மாநில அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தியது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசும்  பங்கேற்றது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கோரிக்கையை கிடப்பில் போட்டு விட்டு நான்கு மாநில அதிகாரிகளின் கூட்டத்தில் தமிழக அரசு பங்கேற்ற நிலையில், இன்று பாராளுமன்றத்தில் எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் “காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக காவிரி நதி நீர் பங்கீட்டு திட்டம் என்ற புதிய அமைப்பை துவங்குவதற்கான பணிகளை துவங்கியிருப்பதாகவும், இது குறித்து நான்கு மாநில அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் “ தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் மேல் முறையீடு செய்வதற்கான வாய்ப்பை மறுத்தது. காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைக்கச் சொன்னது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை உதாசீனப் படுத்தியுள்ள மத்திய அரசு புதிய அமைப்பை உருவாக்க தயாராகி விட்டது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக புதிய அமைப்பு  தேவை என்பது கர்நாடக அரசின் கோரிக்கை. அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு செயல்படுவதாகவே தெரிகிறது.

tamilnews tamilnadu news ,Kaveri ,Cauvery river water sharing

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*