குரங்கணி விபத்து :குற்றவாளிகளை பிடிக்க தீவிரம்

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
குரங்கிணி மலைப்பகுதிக்கு இரு குழுக்களாக டிரக்கிங் சென்ற குழுவினர் தீயில் சிக்கி மீட்கப்பட்டு வருகிறார்கள். இதில் 9பேர் வரை இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் வனத்துறையை கையில் போட்டுக் கொண்டு இப்படி ஒரு டிரக்கிங் ஏற்பாடுகளைச் செய்த நிறுவனத்தை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்த சென்னை டிரக்கிங் கிளப் என்ற அமைப்பின் அலுவலகமும் அதை நிர்வகித்து வந்த சிலரும் தங்கியிருப்பது ஒரே இடத்தில்தான் என்று கூறப்படுகிறது. மலையேற்ற விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் இந்த அமைப்பில் சுமார் 40,000 உறுப்பினர்கள் இருப்பதாக இந்த அமைப்பு கூறுகிறது.ஆனால் மலையேற்றத்தை ஊக்குவிக்கும் தன்னார்வ அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த அமைப்பு 2008-ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பு யாரால் எப்போது துவங்கப்பட்டது எனத் தெரியவில்லை. இதனை பீட்டர் என்ற வெளிநாட்டுக்காரர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் இப்போது சென்னையில் இருக்கிறாரா அல்லது தலைமறைவாகி விட்டாரா என்பது பற்றி தகவல்கள் எதுவும் இல்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*