தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு!

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

காவிரி மேலாண்மை வாரியம் :மோடி வலையில் வீழ்ந்த ஒபிஎஸ் -இபிஎஸ்!

தந்தை பெரியார் தமிழுக்கு எதுவும் செய்யவில்லை என்ற ஒரு பொய் திட்டமிட்டு இங்கு பரப்பப்பட்டு வருகிறது. அது இன்று பார்ப்பன இந்துத்துவ வெறியன் எச்ச. இராஜா வரைக்கும் பேசப்படுகிறது. உண்மையில் பெரியாரை போல் தமிழுக்கு உழைத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதை அவர் எந்த இடத்திலும் தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லையென்பதால் சில்வண்டுகள் எல்லாம் சீண்டிப்பார்க்க முயல்கின்றன.

பெரியாரின் ஆரம்ப காலகட்டத்தில் ஆரிய ஆதிக்கம் எல்லா மட்டங்களிலும் பரவி இருந்தது. சமஸ்கிருதம், இந்தி, பிராமண ஆதிக்கம் என்று கொடிகட்டி பறந்த நேரம். அந்த காலகட்டத்தில் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டுமென்று போராட துவங்குகிறார். அதில் ஆரியத்திற்கு எதிராக எது வந்தாலும் அதை தனித்துவமிக்க தத்துவத்தின் அடிப்படையில் எதிர்க்கிறார். மொழி அடிப்படையிலான ஆதிக்கம் சமஸ்கிருதம் வழியாக வந்தாலும் சரி; இந்தி வழியாக வந்தாலும் சரி அவற்றை எதிர்க்க தமிழைத்தான் கையிலெடுத்தார். அதன் வெளிப்பாடு தான் திருக்குறளுக்கு மாநாடு நடத்தியது.

அதோடு மட்டுமில்லாமல் தமிழ் மொழி சமஸ்கிருதத்தை சாராது தனித்து இயங்கக்கூடிய தனித்துவமிக்க மொழி என்பதை தொடர்ச்சியாக தனது குடியரசில் தனது காலகட்டத்தில் வாழ்ந்த பல்வேறு தமிழ் அறிஞர்களையும், தத்துவாதிகளையும் சிந்தனையாளர்களையும் எழுதவைத்து தமிழின் சிறப்பை இந்த தமிழ் சமுகத்திற்கும், ஏன்! இந்த உலகத்திற்கும் சொன்னவர் நமது தந்தை பெரியார். அப்படி பெரியாரின் குடியரசில் எழுதியவர்கள் மிகமுக்கியமானவர்கள் சிலர். அவர்கள்:

1.மயிலை சீனி வெங்கிடசாமி
2.சாமிசிதம்பரனார்
3.ஈழத்து சிவானந்த அடிகள்
4.கைவல்லியம்
5.சந்திரசேகர பாவலர்
6.சிங்காரவேலர்
7.பண்டிதர் முத்துசாமி
8.கோவை அய்யாமுத்து
9.ஜனசங்கர கண்ணப்பர்
10.சாத்தான்குளம் ராகவன்
11.லீலாவதி
12.அன்னபூரணி
13.ஜீவா
14.பாவேந்தர் பாரதிதாசன்
15.திரு.வி.க
16.சுப்ரமணிய பிள்ளை
17.பா. தாவூஷா

மேற்ச்சொன்னவர்களின் நூல்கள் தான் இன்று நமக்கு தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்ககூடியவைகளாக இருக்கிறது அல்லது அவர்களின் வழித்தொன்றல்களின் நூல்கள் தான் இன்று வரை தமிழின் பெருமையும் அது வடமொழி சமஸ்கிருத்ததிற்கு சற்றும் தொடர்பில்லாத மூத்தமொழி என்று பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. உதாரணமாக
மயிலை சீனி வேங்கிடசாமி அவர்களின் நூல்கள்:

1.களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
2.சமணமும் தமிழும்
3.பெளத்தமும் தமிழும்
4.தமிழர் வளர்த்த அழகு கலைகள்
5.மகேந்திரவர்மன்
6.நரசிம்மவர்மன்
7.மறைந்து போன தமிழ்நூல்கள்
8.பழங்கால தமிழ் வாணிக
9.19ஆம் நூற்றாண்டு தமிழகம்
10.உணவு நூல் இதுபோன்ற 50க்கும் மேற்பட்ட தமிழின் பொக்கிசமான நூல்களை எழுதியவர் மயிலை சீனி வெங்கிடசாமி. அதேபோல

சாத்தான்குளம் இராகவன் நூல்கள்:

1.ஆதிச்சநல்லூரும் பொருநை நாகரீகமும்
2.நம் நாட்டுக் கப்பல் கலை
3.தமிழ்நாட்டுத் திருவிளக்குகள்
4.தமிழ்நாட்டு அணிகலன்கள்
5.தமிழர் பண்பாட்டில் தாமரை
6.இசையும் யாழும்
7.கோநகர் கொற்கை
8.தமிழ்நாட்டு காசுகள்
9.தமிழ்நாட்டு படைகலன்கள்
10.சிந்துவெளி திராவிட நாகரிகம் உள்ளிட்ட பல அரியநூல்களை எழுதியவர். அதேபோல

சாமி சிதம்பரனாரின் நூல்களான
1.தமிழர் தலைவர்
2.தொல்காப்பியத் தமிழர்
3.நாலடியார் பாட்டும் உரையும்
4.பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்
5.பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்
6.சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்
7.பெண்மக்கள் பெருமை
8.மாயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை
9.வளரும் தமிழ்
10.வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறீ உள்ளிட்ட 27நூல்களை எழுதியவர்.

இப்படி தமிழர்களின், தமிழ்மொழியின் பண்பாடு, கலச்சாரம், வணிகம், அரசாட்சி, மக்கள் மாண்பு, உறவுமுறைகள், அணிகலன்கள் போன்ற பல்வேறு ஆராய்சிகளை செய்து தமிழை செம்மார்ந்து தூக்கி நிறுத்திய பெரும் சிந்தனையாளர்களை தனது குடியரசில் தொடர்ந்து எழுதவைத்து தமிழை வளர்த்தவர் தந்தை பெரியார் ஆவார்.

Courtesy : Vijayakumar

பெண்களின் உயிர் பறிக்கும் உடையா சேலை? -மாலதி மைத்ரி

ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருது திரும்பப் பெற்றப்பட்டது

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது ஸ்டாலின் வேண்டுகோள்!

உஷா உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கேரளத்தில் காந்தி சிலை:தமிழகத்தில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*