தீக்காயமடைந்தோரில் 50% பேர் நிலை கவலைக்கிடம்!

சிதம்பரம் விரைவில் கைதாவார்: சுப்பிரமணியசாமி

”விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

குரங்கணி காட்டில் டிரக்கிங் சென்று மீட்கப்பட்டவர்களில் 50% நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
தேனி அருகில் உள்ள குரங்கணி காட்டுப்பகுதிக்கு இரு குழுக்களாக 36 பேர் மலையேற்றத்திற்குச் சென்றனர். இவர்களுக்கு முறையான பயிற்சியோ தற்காப்பு உபகரணங்களோ இன்றி மலையேற்றத்திற்குச் சென்ற நிலையில் காட்டுத்தீயில் இந்தக் குழுவினர் சிக்கினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் தீயில் கருகி பலியானார்கள்.
உயிருக்கு போராடிய 27 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் 14 பேர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நேற்று சென்னை வேளச்சேரியை சேர்ந்த 20 வயது நிஷா என்பவர் உயிரிழந்தார்.இன்று திவ்யா என்ற பெண்ணும் உயிரிழந்தார்.இதனால் சாவு எண்ணிக்கை 10 ஆனது. அது போல மதுரையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ என்பவர் மதுரையில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மதுரையில் சிகிச்சை பெற்றுவரும் 12 பேரில் சரிபாதி பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற தகவலை சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவர்களை காப்பாற்ற போராடி வருகிறார்கள்.

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*