வனத்துறை அனுமதியின்றி டிரக்கிங் சென்று தீயில் சிக்கியதாக அரசு தகவல்!

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதிக்கு டிரக்கிங் சென்ற 36 பேர் கீழே இறங்கும் போது காட்டுத்தீயில் சிக்கினார்கள்.இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. த் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
பின்னர் முதல்வர் பழனிசாமி ஊடகங்களிடம் பேசும் போது:-
“இரு குழுக்களாக மலையேற்றம் சென்ற 36 பேர் கீழே இறங்கும் போது தீயில் சிக்கியிருக்கிறார்கள். தகவல் அறிந்ததும் துரிதமாக மீட்பு பணிகள் நடைபெற்றது. லேசான காயமடைந்தவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டோம். இன்னும் 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.வனத்துறையின் அனுமதியின்றி குரங்கணி மலைப்பகுதிக்கு டிரக்கிங் சென்றுள்ளார்கள்.உரிய அனுமதி பெற்று சென்றிருந்தால் அவர்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்” என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*