விவசாயிகளை நக்சலைட்கள் என பதிவிட்ட சுமந்த் ராமன்

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் :ராகுல்காந்தி

வருகிற 15-ஆம் தேதி புதிய கட்சியை அறிவிக்கிறார் தினகரன்

”ராகுலை சந்தித்திருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும்”- ஹர்திக் பட்டேல்

இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

விவசாயிகள் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 30,000 விவசாயிகள் அகில பாரதிய கிஷான் சபா (ABKS) தலைமையில் கடந்த புதன் அன்று நாசிக்கில் இருந்து மும்பையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். விவசாயிகள் கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் மும்பை சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டிருந்தது. விவசாயிகளின் போராட்ட முறைக்கு அஞ்சி பாஜக அரசும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியிருக்கும் நிலையில், தொலைக்காட்சி தொகுப்பாளர் சுமந்த் ராமன் விவசாயிகளை நக்சலைட்கள் என்றும் தேசவிரோதிகள் என்றும் குறிப்பிட்டு தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என விமர்சனம் எழுந்து வருகிறது. ஆனால் அவர் இதுபோன்று கேலி செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்திருக்கிறார்.

சுமந்த் ராமன் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவை:

விவசாயிகள் போராட்டத்தை எப்படி எல்லாம் குறை கூறுவார்கள் என்றால்

1)அங்கே முப்பதாயிரம் பேர் இல்லை.

2)அவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் அல்ல, இது கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்கட்சிகளின் சதி.

3)இவர்களில் சிலர் நக்சலைட்களாக இருக்கலாம்.

4)இவர்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என விசாரணை செய்ய வேண்டும்.

5)இவர்களுடைய தேவைகளை அரசாங்கம் ஏற்கனவே பூர்த்தி செய்துவிட்டது.

6)எதுவும் நிறைவேறவில்லை என்றால் இவர்கள் தேசவிரோதிகளே என பதிவு செய்திருக்கிறார்.

ஆனால் சுமந்த் இதுபோன்று பேசக்கூடிய ஆளில்லை. எப்போதும் வலதுசாரிக்கு ஆதரவாக ஆஜராகும் சுமனுக்கு மஹாராஸ்டிர விவசாயிகள் மேல் என்ன திடீர் பாசம் என்று தெரியவில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*