விவசாயிகள் போராட்டம் முடிந்துவிட்டதா?

காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு!

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

விவசாயிகள் வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவைகளை நிறைவேற்றுவதாக மஹாராஷ்டிரா அரசு வாக்களித்திருக்கும் நிலையில், தங்களுடைய போராட்டத்தை தற்காலிகமா நிறுத்தியிருக்கின்றனர் விவசாயிகள். விவசாயிகளின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக இது பரவலாக பார்க்கப்படுகிறது.

மும்பையின் ஆசாத் மைதானில் சீதாராம் யெச்சூரியின் தலைமையில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய மஹாராஷ்டிர வருவாய் அமைச்சர் சந்திரகாந்த் பாடில், விவசாயிகளின் கோரிக்கைகள் அத்தனையும் ஏற்றுக் கொள்வதாக கூறினார். “அரசாங்கம் நம்முடைய கோரிக்கைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டதாக எழுத்தில் உறுதியாகும் போது, விவசாயிகளை எல்லாம் வீட்டிற்கு போகும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இதுபற்றி பேசிய மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவில், “ நாங்கள் மிக சுமூகமாக குழு விவாதங்கள் நடத்தி பழங்குடிகள், விவசாயிகள் மற்றும் பேரணியில் பங்கேற்ற உழைப்பாளர்கள் வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.

பேரணியாக திரண்டு வந்த மக்களின் கோரிக்கைகளில் முக்கியமாக இருந்தவை:

1) கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி திட்டத்தை சரியான முறையில் அமல் செய்வது
2) 2006 ஆம் ஆண்டின் வன உரிமை சட்டத்தை அமல் செய்வது மற்றும்
3) காய்ப்புழுவினால் உண்டான பயிர் நாசம் மற்றும் மழையினால் உண்டான அழிவிற்கு நஷ்ட ஈடு வழங்குதல்.

வன உரிமை சட்டத்தை அமல் செய்த ஃபட்நாவிஸ் நிலுவையில் இருக்கும் கோரல்கள்/ முறையீடுகள் எல்லாம் ஆறு மாதங்களில் நிவர்த்தி செய்யப்படும் எனவும் விவசாயக் கடன் தள்ளுபடிக்காக ஏற்கனவே 4.62 மில்லியன் ரூபாயை வங்கிகளுக்கு அளித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

எம். எஸ். ஸ்வாமிநாதன் ஆணையம் அமைப்பது குறித்து மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் எனவும் முதல்வர் ஃபட்நாவிஸ் அறிவித்தார். 2008 ஆம் ஆண்டின் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் நன்மையடையாத விவசாயிகளுக்கு தற்போதைய சத்திரபதி சிவாஜி மஹாராஹ் ஷெட்காரி சன்மான் திட்டத்தின் கீழ் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதைப் போலவே தண்ணீர் திட்டங்கள், சஞ்சய் காந்தி நிராதர் யோஜனா, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், பால் விலைகளை சரி செய்தல், நியாய விலை அங்காடிகளில் ரேஷன் பொருட்கள் வாங்க விவசாயிகளுக்கு ரேஷன் அட்டை கிடைக்கச் செய்தல் என பல கோரிக்கைகளுக்கு நேர்மறையான பதிலையே அளித்திருக்கிறது அரசாங்கம்.

பெண்களின் உயிர் பறிக்கும் உடையா சேலை? -மாலதி மைத்ரி

ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருது திரும்பப் பெற்றப்பட்டது

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகம் சமரசம் செய்து கொள்ளக் கூடாது ஸ்டாலின் வேண்டுகோள்!

உஷா உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கேரளத்தில் காந்தி சிலை:தமிழகத்தில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு

ஹாதியா திருமணம் சட்டப்படி செல்லும்:உச்சநீதிமன்றம் தீர்ப்பு

#WhoKilledUshaஉஷாவை உதைத்தே கொன்ற போலீஸ் என்ன நடந்தது திருச்சியில்?

காவிரி மேலாண்மை வாரியம் :தமிழகத்தை ஏமாற்றும் மோடி சர்க்கார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*