தூக்கிலேற்றி விட்ட சாதி: அண்ணன் முத்துக்கிருஷ்ணன் நினைவாக – subha D

நாங்கள் சேரிகளின் சாக்கடைகளில் மட்டுமே சாவதில்லை…குளிரூட்டப்பட்ட அதி நவீன அறையில் பட்டம் வாங்க வந்த பின்னும் உங்கள் சாதிவெறி எங்களை விடுவதாயில்லை.ரோஹித் வெமுலாவுடன் துணைக்கு அனுப்பப்பட்ட முத்து கிருஷ்ணன் நினைவாக…

 

பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், பெரும்பாலும் தன் சமூக மக்களுக்கு எது நடந்தாலும் தனக்கென்ன என்பது போல் தான் இருக்கிறார்கள். இவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது ,

வர்ணாசிரம கொள்கைகளை வகுத்தது வேண்டுமானால் ஆரியனாக இருக்கலாம், ஆனால் அதை இன்றளவும் நீர்த்துப் போகச் செய்யாமல் இருப்பது அடுத்த படிநிலையில் இருப்பவர்கள் தான். பேச்சுக்கு மாமன், மச்சான், அக்கா, தங்கச்சி என்று சொல்லுபவர்கள் தான் அதிகம், உணர்வோடு கோடியில் ஒருத்தர் தான் இணைவார்கள்.

நான் இதையெல்லாம் பேசினால், என்னைக் கிண்டல் செய்வார்கள், சிரித்துவிட்டு கடந்து போவார்கள் , என்னை வித்தியாசமாக பார்ப்பார்கள் என்று தான் எதைப் பற்றியும் பேசாமல் காதல் கவிதை எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்காக நீங்கள் பேசாமல் வேறு யார் பேசுவார்கள்.. ? உன் வலி அவனுக்குப் புரியாது, புரிந்து தான் வருகிறேன் என்றால் அது பொய். அனுபவிப்பதற்கும் அதை அனுபவித்தால் எப்படி இருக்கும் என்று தெரியும் என்பதற்கும் வித்தியாசமதிகம்.

இந்தியன், தமிழன் என்ற எந்த அடையாளமும் உன் சொந்தம் ஒருவனைக் காப்பாற்ற முடியாத பொழுதும், இவ்வடையாளங்கள் உங்களைத் தவிர்த்து ஏனையோருக்கு பலம் சேர்க்கும் பொழுதும், பெரும்பான்மை சமூகம் உங்களை கைவிட்ட பின்னரும் உங்கள் அடையாளத்தை வெளியில் சொல்லி சமத்துவம் வேண்டி இயங்க மறுக்கும் உங்களை எல்லாம் இன்னும் இனம், மொழி, தேசம் என்று கூட்டுக்குள்ளேயே வைத்திருப்பது தான் அவர்கள் சாமர்த்தியம், உங்கள் தோல்வி.

படித்து, முன்னேறுங்கள் என்பான், படிக்கப் போன இடத்தில் தூக்கில் தொங்க விடுவான்.வாழ விடாத சாதி, செத்த பின்பும் அவன் அந்த சாதி தானா என ஆராய்ச்சியும் செய்ய வைக்கும். பிண அரசியல் செய்கிறோம் என்பான், பிணங்கள் குவிய குவிய கொக்கரிப்பான். வல்லாதிக்க வல்லூறுகள் கூட்டனியோடு உங்கள் அடையாளத்தை அழித்து, உங்களைத் தனிமைப்படுத்தி, தீண்டாமைச் சுவரை பலமாக கட்டி, அடைத்து வைக்கப் பார்க்கும் எதையும் அடித்து நொறுக்குங்கள்.

உங்கள் அரசியலை நீங்களே பேசுங்கள். உங்களுக்காகப் பேசுகிறேன் என்று யார் வந்தாலும் புறக்கணியுங்கள். சமரசமே வேண்டாம், எங்கும் யாரோடும். சமரசம் பேச சிறுத்தைகள், பகுஜன்கள் என யார் வந்தாலும் சேர்க்க வேண்டாம். உங்களை நீங்களே அரசியல்படுத்தாத வரை முத்துக்கிருஷ்ணன்கள் இருந்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

அண்ணன் முத்துக்கிருஷ்ணன் நினைவாக…

@Subha D

 

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

நீதித்துறையை கட்டுப்படுத்த முனைகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி!

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தீர்மானம்:கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு! 

காலா டீசர் புதிய சாதனை?

சத்யராஜுக்கு லண்டனில் சிலை?

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

காவிரி மேலாண்மை வாரியம் :மோடி வலையில் வீழ்ந்த ஒபிஎஸ் -இபிஎஸ்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*