நீதித்துறையை கட்டுப்படுத்த முனைகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி!

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தீர்மானம்:கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு!

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

காவிரி மேலாண்மை வாரியம் :மோடி வலையில் வீழ்ந்த ஒபிஎஸ் -இபிஎஸ்!

நீதித்துறையையும் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும் யார் வேண்டுமென்றாலும் விமர்சிக்கலாம். ஆனால் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளுக்கோ, நீதித்துறையின் நடவடிக்கைகளுக்கோ உள் நோக்கம் கற்பிக்கக் கூடாது. அப்படி கற்பித்தால் அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை பாயும் . இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரை தமிழகத்தைச் சேர்ந்த ஆடிட்டரும் துக்ளக் இதழின் ஆசிரியருமான குருமூர்த்தி விமர்சித்திருக்கிறார்.
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்த டெல்லி நீதிமன்ற உத்தரவு தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட ஆடிட்டர் குருமூர்த்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதன் அதிருப்தியை பதிவு பண்ணியுள்ளது.ஐ.என்.எக்ஸ் ஊடக வழக்கில் சி.பி.ஐ கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தது. அமலாக்கத்துறையும் கைது செய்ய தீவிரம் காட்டிய நிலையில் அமலாக்கத்துறை கைது செய்ய மார்ச் 20- தேதிவரை டெல்லி நீதிமன்றம் தடை விதித்தது.
கடந்த 9-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. இரு நீதிபதிகளில் ஒருவர் முரளீதர்.இந்நிலையில், ஆடிட்டர் குருமூர்த்தி ”இந்த உத்தரவை பிறப்பித்த 2 நீதிபதிகளில் ஒருவரான முரளிதர் ப.சிதம்பரத்தின் ஜூனியரா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியது.
கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்த நீதிபதிகளின் தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் விதமாக குருமூர்த்தியின் ட்விட்டர் பதிவு இருந்தது. நீதிபதி முரளீதர் கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும் முன்னாள் நிதியமைச்சரும், வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தின் ஜூனியர் என்பதால் கார்த்தியை கைது செய்ய தடையாண பிறப்பித்தார் என்று உள் நோக்கம் கற்பிப்பதாக டுவிட்டரை அதை பின் தொடர்வோரில் பலர் புரிந்து கொண்டனர்.
குருமூர்தியின் இந்த ட்விட்டர் பதிவை தமிழக நீதிபதிகள் பலர் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.இதையடுத்து தானாக முன் வந்து இப்பிரச்சனையை கையில் எடுத்தது நீதிமன்றம்.“குருமூர்த்தியின் இந்த பதிவு விஷமத்தனமான, மறைமுகமான அவமதிப்பு” என்று நீதிபதிகள் முரளீதரும், ஐ.எஸ். மேத்தா அடங்கிய அமர்வு அதிருப்தியை பதிவு செய்தனர். குருமூர்த்தியின் ஒரு பதிவு நேரடியாக உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். ஆனாலும் இப்போதைக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப மாட்டோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.நீதிபதிகளை அவமதித்த குற்றத்தில் முன்னாள் நீதிபதி கர்ணனை ஆறு மாதம் சிறையில் அடைத்தார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள். ஆனால் இத்தனை மோசமாக ஒரு உத்தரவுக்கு உள்நோக்கம் கற்பித்த குருமூர்த்திக்கு நோட்டீஸ் அனுப்புவதில் கூட நீதிபதிகளுக்கு தயக்கம் இருப்பது வியப்பையும் ஆச்சரியத்தையும் நாட்டின் சூழலையும் எண்ணிப்பார்க்க தோன்றுகிறது.
தமிழ்செய்திகள், தமிழில்செய்திகள், tamilnews #tamilnadunews, Gurumurthy #Swaminathan_gurumurthy  #Auditor-Gurumoorthy #துக்ளக்_குருமூர்த்தி #ஆடிட்டர்குருமூர்த்தி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*