விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

நீதித்துறையை கட்டுப்படுத்த முனைகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி!

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தீர்மானம்:கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு!

வர்ணாஸ்ரம தர்மப்படி கீழான சாதி எது:பள்ளித் தேர்வில் கேள்வி!

குரங்கனி காட்டுத்தீ:மக்களை மீட்ட பழங்குடிகள் video

காவிரி மேலாண்மை வாரியம் :மோடி வலையில் வீழ்ந்த ஒபிஎஸ் -இபிஎஸ்!

உலகில் முக்கியமான இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76-வது காலமானார்.
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1942-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தவர்.
இளம் வயதில் மோட்டார் நியூரான் நோய் தாக்கி தன் உடலின் செயல்பாட்டை இழந்தார். இருந்தபோதும், அறிவியல் மேல் அவருக்கிருந்த காதல் கொஞ்சமும் குறையவில்லை. தன் 24ம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பு பயின்று வந்தபோது 134 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதினார். “விரிவடையும் பேரண்டத்தின் பண்புகள்” (Properties of expanding universes) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அது நம் அண்டத்தின் மீது நமக்கு அப்போதிருந்த இருந்த அறிவை மேலும் அகலப்படுத்தியது. எண்ணற்ற பல விடையில்லா கேள்விகளுக்கு விடைகள் தானாகப் புலப்பட்டது.
கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக பணியாற்றிய ஸ்டீபன் ஹாக்கிங் இதுவரை 12 உயரிய விருதுகளை வென்றுள்ளார்.குவாண்டம் தியரி,பிளாக் ஹோல் தியரிகளில் பங்காற்றியவர்.
“என்னுடைய ஆராய்ச்சிகள் மட்டுமல்லாது, அனைவரின் ஆராய்ச்சிகளும் இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இலவசமாக, தடையின்றி படித்துக்கொள்ளும் வசதி செய்து தரப்பட வேண்டும்.” என்ற உயரிய நோக்கத்தை உலக மக்களுக்காக விட்டுச் சென்றவர் ஸ்டீபன் ஹாக்கிங்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*