தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்:திமுக வெளிநடப்பு!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துவங்கினார் தினகரன்!

பிரமாஸ்திரத்தை எடுக்குமா நாக்பூர்?- ஆழி.செந்தில்நாதன்

சட்டமன்றத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து வந்த திமுக உறுப்பினர்கள்!

மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் :உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
தமிழக அரசின் 2018-19 -ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவையில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
#
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 420 கோடி ரூபாய் செலவில் 20 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
#
பள்ளிக்கல்வி துறைக்கு 27,205.88 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
#
கும்பகோணம் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் பாரம்பரிய கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும்
#
ஆழ் கடல் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு உயர் அதிவெண் தொடர்பு கருவிகள் வழங்கப்படும்
#
இராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் 70 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும்.
#
கிண்டியில் 20 கோடி ரூபாய் செலவில் அம்மா பசுமை பூங்கா திட்டம் துவங்கப்படும்
#
விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி உருவாக்கப்படும்
#
வேளாண் இயந்திரங்களுக்கான வாடகை மையங்கள் உருவாக்கப்படும்.
#
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்டம் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்
#
இளையோர் நலம் , விளையாட்டுத்துறைக்கு 191.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
#
மீன்வளத்துறைக்கு 1,016.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
#
செங்கோட்டை -கொல்லம் இடையிலான சாலையை அகலப்படுத்த திட்டம்
#
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணிகள் துவக்கம்
#
நெடுஞ்சாலை துறைக்கு 11,073.66 கோடி ஒதுக்கீடு
#
உதய் மின் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் தமிழக மின்வாரியத்திற்கு நட்டம் அதிகரித்துள்ளது.
#
ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் முடிவின் துவக்கம் :மம்தா

பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு வழக்கு மாறன் சகோதரர்கள் விடுதலை!

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச் சூழல் மதிப்பீட்டுக் குழு அனுமதி!

நீதித்துறையை கட்டுப்படுத்த முனைகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*