பிரமாஸ்திரத்தை எடுக்குமா நாக்பூர்?- ஆழி.செந்தில்நாதன்

சட்டமன்றத்திற்கு கருப்புச் சட்டை அணிந்து வந்த திமுக உறுப்பினர்கள்!

மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் :உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

பாஜகவின் முடிவின் துவக்கம் :மம்தா

பி.எஸ்.என்.எல் தொலைபேசி இணைப்பு வழக்கு மாறன் சகோதரர்கள் விடுதலை!

தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச் சூழல் மதிப்பீட்டுக் குழு அனுமதி!

நீதித்துறையை கட்டுப்படுத்த முனைகிறார் ஆடிட்டர் குருமூர்த்தி!

உ.பி.யில் இரு தொகுதிகளில் பாஜகவுக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வியின் ஆழம் மிகப்பெரியது.
அதிர்ச்சி மிகப்பெரியது. அவர்களது 2019 கனவின் மீது விழுந்திருக்கும் மிகப்பெரிய அடி இது.

இப்போது பாஜவுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள வலு என்ன தெரியுமா? 272!

பெரும்பான்மைக்குத் தேவையான அதே வரம்புக்கோட்டில் நிற்கிறது ஆளும் கட்சி.

இந்தி பெல்ட்டில் பாஜகவை அடித்துக்கொள்ள ஆளில்லை என்கிற இறுமாப்பை இன்று உபியும் பிஹாரும் அசைத்திருக்கின்றன. இந்த ஆண்டு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம். ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் வருகிறது. மூன்றிலும் ஆளும் கட்சி பாஜகதான். மத்தியும் மாநிலங்களிலும் ஆளும் கட்சிக்கு அதற்கு எதிரான மனநிலை இங்கெல்லாம் நிலவுகிறது. ஒருவேளை இந்த மாநிலங்களில் பாஜக தோற்கக்கூடத் தேவையில்லை, குஜராத் போல மயிரிழையில் தப்பினால்கூட, இந்தி பெல்ட் இறுமாப்புக்கு பெரிய ஆப்பு அடிக்கப்படும்.

கர்நாடகத்தின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வாழ்வும் சாவும் இந்தி பெல்ட்டியிலேயே இருக்கப்போகிறது.

திரிபுரா வெற்றி பாஜகவுக்கு குறியீட்டு ரீதியிலான வெற்றி மட்டுமே. அது நிஜத்தில் எதையும் தீர்மானிக்கும் அளவிலான வெற்றி அல்ல. திரிபுரா இந்தியாவின் ஆட்சிகளை தீர்மானிக்கிற இடத்தில் இல்லை. ஆனால் இன்றைய உபி, பிஹார் தோல்வி அஸ்திவாரமே அதிரும்படியான வீழ்ச்சி. குறிப்பாக கூட இருந்து குழிதோண்டிய நிதீஷின் தோல்வியை பிஹார் கொண்டாடுகிறது. கான்ஷிராம் – முலாயம் காலத்துக்கு திரும்புகிறது உத்தரப் பிரதேசம்.

வடக்கைப் பொறுத்தவரை, “கமண்டல்” அரசியலுக்கு மண்டல் அரசியல்தான் எப்போதுமே முறிமருந்து.

ஆனால் நாம் ரொம்ப மகிழ்ச்சி அடையமுடியாது. தொடர்ந்து தோல்விகள் வரும் என்று தெரிந்தால், அவசர நிலை பிரகடனத்தையும் நாடுவார் மோடி.

மாயாவதி, அகிலேஷ், தேஜஸ்வி, மமதா, சந்திரபாபு, சந்திரசேகர் ராவ், ஸ்டாலின், உமர் ஆகியோரும் கம்யூனிஸ்ட்களும் இணைந்து, காங்கிரசோடு தேவையான இடங்களில் சேர்ந்துகொண்டு ஒரு மகா கூட்டணியை அமைக்கப்போகிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. நேற்றைய சோனியா விருந்தும் இன்றைய தேர்தல் முடிவுகளும் அதை நோக்கி எதிர்க்கட்சிகளைத் தள்ளும்.

பணத்தையும் சட்டத்தையும் ஏவி இந்தக் கூட்டணி உருவாகாமல் இருக்க எல்லா வேலைகளையும் பாஜக செய்யும் என்றாலும், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுதான் இருக்கிறது.

உபியில் எஸ்பியும் பிஎஸ்பியும் ஒன்று சேரும் என தாங்கள் நினைக்கவில்லை என்று பாஜக சொல்லிக்கொண்டிருக்கிறது. பச்சைப் பொய். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவிய அடுத்த நிமிடமே அகிலேஷ் யாதவ் மாயா அக்காவோடு இணைந்து நிற்கவேண்டும் என்று சொல்லத்தொடங்கிவிட்டிருந்தாரே!

இது பாஜக எதிர்கொள்ளும் நிஜமான நெருக்கடி. இனி ஃபோட்டோஷாப்கள் பலன் தரா.

எனவே, தனது பிரமாஸ்திரத்தை எடுக்கவேண்டிய நிர்பந்தம் ஆர் எஸ் எஸுக்கும் வந்துவிட்டது.

எதுவும் நடக்கலாம். அபாயக் கட்டம் முடியவில்லை.

tamilnews, tamilnadunews, politicalnews,

காவிரி மேலாண்மை வாரியம் கோரி தீர்மானம்:கூடுகிறது தமிழக சட்டமன்றம்!

காவிரி துரோகம்: முழுமையாக தோல்வியடைந்தது தமிழக அரசு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*