தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கமே காரணம்: பன்னீர்செல்வம்!

திராவிடத்தை ஏன் தவிர்த்தார் தினகரன்: பின்னணி!

பாடம் எடுப்பதை நிறுத்துங்கள்:யோகிக்கு சித்தராமையா அட்வைஸ்!

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்:திமுக வெளிநடப்பு!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துவங்கினார் தினகரன்!

பிரமாஸ்திரத்தை எடுக்குமா நாக்பூர்?- ஆழி.செந்தில்நாதன்

மற்ற மாநிலங்களைவிட தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதற்கு 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியே காரணம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

அவர் தனது பட்ஜெட் உரையில் கூறியதாவது:

கடந்த 1967 மார்ச் 6-ம் தேதி அண்ணா முதல்வராகி தமிழகத்தில் திராவிட ஆட்சிக்கு வித்திட்டார். சில அரசியல் விமர்சகர்கள் குறுகிய கண்ணோட்டத்துடன் திராவிட ஆட்சியை குறைகூறி, முற்றிலும் தவறான, உண்மைக்கு மாறான பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். அவர்கள் திராவிட இயக்கத்தை அழித்துவிடலாம் என பகல் கனவு கண்டுவருகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் சமூக, பொருளாதாரத்தில் மாபெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வது, பொது சுகாதாரம், கல்வி, சமூகப் பாதுகாப்பு, மனிதவள மேம்பாட்டு குறியீடு, தொழில், பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் தமிழகம் கண்டுள்ள முன்னேற்றத்தை மனசாட்சி உள்ள எவராலும் மறுக்க முடியாது.

அண்மையில் நிதி ஆயோக் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் சுகாதார குறியீடுகளில் நாட்டிலேயே தமிழகம் 3-வது இடத்திலும், உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் முதலிடத்திலும் உள்ளது. 2011-12-ல் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் தேசிய சராசரி 21.92 சதவீதம்.

ஆனால், இது தமிழகத்தில் 11.28 சதவீதமாக குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் குஜராத்தில் 16.63, கர்நாடகாவில் 20.90, மத்தியப்பிரதேசத்தில் 31.65, மகாராஷ்டிராவில் 17.35, ராஜஸ்தானில் 14.71, உத்தரப்பிரதேசத்தில் 29.43, மேற்குவங்கத்தில் 19.98 என்ற அளவில்தான் உள்ளது.

தனிநபர் வருமானம் உயர்வு

2016-17-ல் தனிநபர் வருமானம் தேசிய அளவில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 219 ஆக உள்ளது. ஆனால், தமிழகத்தில் ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 263 ஆக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நாட்டிலேயே 5-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கு கிறது.

மத்தியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அரசுகளின் பாராமுகமும், பிற மாநிலங்களுக்கு வழங்கப்படுவது போன்ற சலுகைகள் கிடைக்காத நிலையிலும் இத்தகைய மகத்தான சாதனைகளை சமூக, சமத்துவம் கொண்ட திராவிட இயக்கத்தால்தான் சாதிக்க முடிந்தது. நாம் அடைந்த இந்த முன்னேற்றம் நமது சொந்த முயற்சிகளாலும், சொந்த பலத்தாலுமே ஏற்பட்டது. சமூக, பொருளாதார மாற்றத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகம் விளங்குகிறது என்பதை அரசியல் விமர்சகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சியை மற்ற மாநிலங்களுடன் ஒப்பீடு செய்து உண்மையை மக்கள் உணர வேண்டும்.

திராவிட இயக்க ஆட்சியில் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுகவே அதிக காலம் ஆட்சியில் இருந்து சவால்களை எதிர்கொண்டு இந்த பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், தவறான பிரச்சாரங்கள் செய்தாலும் இந்த இயக்கம் தளர்வின்றி மேலும் வளரும், போற்றுவார் போற்றினும், தூற்றுவார் தூற்றினும் தங்களது வியர்வையாலும், உழைப்பாலும் இந்த இயக்கத்தை வளர்த்த தலைவர்களின் கனவுகளை நனவாக்கும் பாதையில் நாம் தொடர்ந்து முன்னேறுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி -தமிழ் இந்து

TAMILNEWS, TAMILNADUNEWS, DRAVIDAM #PERYAR

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*