குரங்கணி மரணம் 17-ஆக உயர்வு

கே.சி பழனிசாமியை அதிமுகவில் இருந்து நீக்கிய பாஜக!

மோசமானது நடராஜன் உடல்நிலை: பரோலில் வருகிறார் சசிகலா

குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டைச் சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 60 சதவீதம் தீக்காயங்கள் உடன் மருத்துவமனையில் சதீஷ்குமார் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்தார்.

முன்னதாக தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைக்கு டிரெக்கிங் சென்ற 36 பேர் கடந்த 12-ஆம் தேதி காட்டுத்தீயில் சிக்கினர். இவர்களில் சிலர் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் பெற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் என மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சக்திகலா, சேலம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி ஆகியோர் அடுத்தடுத்து சிகி்ச்சை பலனின்றி உயிரிழந்தனர். பலத்த தீக்காயம் அடைந்தவர்களில் 16 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் காட்டுத் தீயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.

வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்து மோடி அரசை ஆதரிக்கப் போகும் அதிமுக!

நிர்பயாவின் அம்மாவே இவ்ளோ அழகு அப்போ நிர்பயா :அதிச்சியளித்த டி.ஜி.பி

அதிமுக எம்.பிக்களை நம்பி மோடி அரசு: பயன்படுத்துவார்களா ஒபிஎஸ்-இபிஎஸ்!

மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது தெலுங்கு தேசம்!

பாடம் எடுப்பதை நிறுத்துங்கள்:யோகிக்கு சித்தராமையா அட்வைஸ்!

தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கமே காரணம்: பன்னீர்செல்வம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*